வியாழன், 20 அக்டோபர், 2011

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுப்பினர்கள் யாழ் விஜயம்



இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுப்பினர்கள் யாழ் விஜயம்: நிலைமைகளை பார்வையிட்டனர்!

இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் யுத்தத்திற்கு பின்னரான யாழ். குடாநாட்டின் நிலைமைகளை நேரில் அறிந்துகொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை சென்றடைந்த அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் நேற்று பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்திருந்த நிலையில் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர்.கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். சென்றடைந்த ஜக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழுவினரை வரவேற்ற யாழ். படைத் தலைமையக அதிகாரிகள் யாழ். கோட்டை மற்றும் யாழ். மாவட்ட செயலகம், யாழ். நகரப்பகுதி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

யாழ் குடாநாட்டின் மீள்குடியேற்றம், அபிவிருத்திப் பணிகள், மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் உல்லாசப் பயணிகளின் வருகை ஆகியன தொடர்பில் ஜக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழு குழுவினருடனான சந்திப்பில் கலந்துரையாடியதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதன்போது யாழ். குடாநாட்டின் சமகால நிலைப்பாடுகள் குறித்து ஆராய்ந்த ஜக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழுவினர், யுத்தத்திற்கு பின்னரான யாழ். குடாநாட்டின் நிலைமைகள் எவ்வாறுள்ளதெனவும் கேட்டறிந்து கொண்டனர். அத்துடன், இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரம், கைத்தொழில் முதலீடுகள் ஆகியன குறித்தும் அவர்கள் கேட்டறிந்துகொண்டதாகவும் யாழ். அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

யாழ். அரசாங்க அதிபருடனான கலந்துரையாடலில் ஜக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழுவினரான கெட்சலர், வன்சான்சலர், ஜக்குயின்ரன்ஸ் ஆகியோர் உட்பட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் விக்கிரமசூரியவும் கலந்துகொண்டார்.

கருத்துகள் இல்லை: