புதன், 19 அக்டோபர், 2011

நடிகை சர்ச்சை! பார்த்திபன் அந்த நடிகையிடமே கேட்டு தெரிந்து



       சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன் படத்தின் இசைவெளியீடு பிரமாண்டமான முறையில் நடந்தது. விழாவுக்கு பல நடிகைகள் வந்திருந்தும் படத்தின் நாயகி பூர்ணா வரவில்லை. அதே போல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் வரவில்லை.
ஆனால், பூர்ணா வராதது தான் விழாவுக்கு வந்த பலரால் பேசப்பட்டது. அதை தொடர்ந்து, படம் நடித்து முடிப்பதற்குள் படாதபாடு படுத்திவிட்டார் இயக்குனர், அதனால் தான் பூர்ணா வரவில்லை என்று செய்திகள் எழுதப்பட்டது.  
இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த, ‘வித்தகன்’ நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், நான் நடிகைகள் எல்லோரையும் மிகவும் மதிப்பேன். நடிகை தொழில் என்பது அழகான ஒரு விஷயம். நம்முடைய விருப்பத்திற்கு எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் இடம் கொடுப்பாங்க, ஆனால் அவர்கள் எல்லோரையும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடியாது. நடிப்பது என்பது ஒரு ஸ்பெஷலான விஷயம். 

நான் நடிகைகளிடம் நடிப்பை தவிர எந்த விஷயத்தையும் எதிர்பார்ப்பதில்லை. இதை உண்மையாகவே சொல்கிறேன். ஆசாபாசங்களை நிறைவு செய்துகொள்ள வசதிகள் நிறைய இருக்கிறது. அதை போய் ஒரு நடிகையிடம் எதிர்பார்ப்பது என்னை மாதிரி இந்த தொழிலை கௌரவமாக நேசிக்கிற இயக்குனர்களிடம் இல்லாத ஒரு விஷயம். 

இதை நிறைய இயக்குனர்கள் சார்பாகவே சொல்கிறேன். நடிகையிடம் நடிப்பை தவிர மற்ற விஷயங்களை எதிர்பார்த்தால் அவர் ஒரு சரியான இயக்குனர் இல்லை என்பதே என்னுடைய கருத்து. 

அந்த மாதிரி ச்சீப்பான அபிப்பிராயம் எனக்கு கிடையாது. இதை அந்த நடிகையிடமே கேட்டு தெரிந்துகொள்ளளாம். பூர்ணாவை ஷூட்டிங்கில் யாரோ கையை பிடித்து இழுத்த மாதிரியும்... இல்லை, இழுக்க முயற்சி செய்த மாதிரியும்... இந்த செய்திகள் ரொம்ப ரொம்ப அறுவருப்பாக இருக்கிறது. 

அப்படிப் பார்த்தால் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் தான் விழாவுக்கு வரவில்லை. அவரையும் நான் கையை பிடித்து இழுத்தேனா என்ன? பூர்ணா வராததால் வித்தகன் விழாவுக்கு எந்த பாதிப்புமே இல்லை என்றார்.    


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :


Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]


Name : aravindhskumar Date :10/19/2011 5:26:48 PM
பார்த்திபன் மிகவும் மரியாதைக்குரிய ஓர் இயக்குனர்...
Name : கரம்பக்குடி ச.மு.ச.மஜீத் Date :10/19/2011 5:11:56 PM
படம் ஓட வேண்டும் என்றால் இதுபோல சில விளம்பரங்கள் வேண்டும் அண்ணாச்சி ஆகையாலே இத பெருசா எடுத்துக்க வேணாம்.

கருத்துகள் இல்லை: