புதன், 19 அக்டோபர், 2011

வட, கிழக்கில் காணிப்பிரச்சினை இல்லை -காணி அபிவிருத்தி அமைச்சர்

வட, கிழக்கில் காணிப்பிரச்சினை இல்லை - உண்ணாவிரதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதாம்
வடக்கு கிழக்கில் காணி பிரச்சினை உள்ளதாகக் கூறி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
30 வருட யுத்தத்தால் துன்பங்களை அனுபவித்து வந்த வடக்கு மக்களின் காணிப் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணிப் பதிவை அரசாங்கம் மேற்கொள்ளாது என தெரிவித்துள்ள அமைச்சர், இது புரியாமல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருப்பதை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: