புதன், 31 ஆகஸ்ட், 2011

மாகாணசபைகளின் காணி அதிகாரம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு

இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், தென் மாகாணசபைக்குட்பட்ட பிரதேசத்தில், மாகாண சபையின் காணி அதிகாரம் சம்பந்தமாக முக்கியமான தீர்பபொன்றை, மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கியுள்ளது.
தென் மாகாணத்திலுள்ள ‘பொரவகம’ கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஹெச்.ஹெச். அலிஸ் நோனா என்பவரின் காணி வழக்கொன்று தென் மாகாண மேல் நீதிமன்றில் நடைபெற்ற பொழுது, அந்த விடயம் சம்பந்தமாக தீர்ப்பு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லையென மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
அது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிபதி வழங்கிய தீர்ப்பில், காணி உரிமைப் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மாகாண மேல்நீதி மன்றுக்கு உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு, மாகாணசபைகளின் காணி அதிகாரம் பற்றிய விடயத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக விளங்குகிறதென சட்ட வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: