புதன், 31 ஆகஸ்ட், 2011

காணாமற்போன 700 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணாமற்போன சிறுவர்களில் சுமார் 700 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்கள் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பீ.பி.சி செய்தி சேவைக்கு அளித்த செவ்வியில் வவுனியா அரச அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த சூழலில் சுமார் ஆயிரத்து 800 சிறுவர்கள் காணாமற்போனதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் கூறியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஓமந்தைக்கு வருகைதந்த பெற்றோர் தமது சிறார்கள் காணாமற்போனமை தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தனர்.

காணாமற் போன சிறார்கள் தொடர்பில் யுனிசெப் அமைப்பினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.பி.சிக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேலும் ஆயிரம் சிறார்கள் காணாமற் போயுள்ளதாக அரசாங்க அதிபரை மேற்கோள்காட்டி பீ.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சிறுவர்களை கண்டுபிடிப்பதற்கு இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து யுனிசெப் அமைப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: