வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூல்!சல்மான் கான் நடித்த 'பாடிகார்ட்

t;


சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள பாடிகார்ட் படம் திரையிட்ட முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வாரியுள்ளது. இதுவரை இந்தித் திரையுலகில் படைக்கப்பட்டிருந்த முதல் நாள் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது பாடிகார்ட்.

மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படம் பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் விஜய் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்போது இது இந்திக்கும் அதே பெயரில் போயுள்ளது. இந்தியில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்துள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையின்போது திரைக்கு வந்த பாடிகார்ட் வசூலில் சாதனை படைக்க ஆரம்பித்துள்ளதாம். படம் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் சல்மான் கான் குஷியாகியுள்ளார். அவரது குஷிக்கு எக்ஸ்டிரா காரணமும் உண்டு. கடந்த 2009ல் ரம்ஜான் பண்டிகையின்போது அவர் நடித்த வான்டட் படம் வெளியாகி ஹிட் ஆனது. 2010ல் தபங் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதுவும் ரம்ஜானுக்குத்தான் வெளியானது. இப்போது தொடர்ச்சியாக 3வது முறையாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியான பாடிகார்ட் பெரும் வசூலை வார ஆரம்பித்திருப்பதால் சல்மான் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.

இந்த ரூ. 22 கோடி என்பது உள்ளூர் வசூல் மட்டுமே. உலகளாவிய வசூல் இன்னும் கணக்கிடப்படவில்லை.

பாடிகார்ட் குறித்து ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ப்ரீத்தி சஹானி கூறுகையில், மிகப் பிரமாதமான வரவேற்பு படத்துக்குக் கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 20 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கூடுதலாகவே கிடைத்துள்ளது. முதல் நாள் வசூல் சாதனையில் இது ஒரு மைல் கல் என்றார்.

ரூ. 60 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 2600 பிரின்டுகளும், வெளிநாடுகளில் 325 பிரிண்ட்களும் போட்டுள்ளனர்.

மலையாள பாடிகார்டை இயக்கிய சித்திக் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கானின் மைத்துனர் அதுல் அக்னிஹோத்ரி தயாரித்துள்ளார். முதல் வாரத்தில் பாடிகார்ட் ரூ. 100 கோடி வசூலை அள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ஒரிஜினல் பாடிகார்ட் படம் சுமாராகத்தான் போனது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தமிழிலிலும், இந்தியிலும் இப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளது

கருத்துகள் இல்லை: