தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது மனிதாபிமான மற்ற செயல்தான். அது குற்றம் தான். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே இறந்து விட்டனர். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை கைதிகளாக உள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து விட்டனர். எனவே கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்கள் மனுவை மறு பரிசீலனை செய்து தூக்குத் தண்டனையில் இருந்து அவர்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கனவே பல நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இந்தியாவிலும் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. எனவே மத்திய அரசு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதே சமயத்தில் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் எதிர்க்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக