ஞாயிறு, 26 நவம்பர், 2017

தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே தினகரன் நேர்காணல் ... வச்சு செஞ்ச பசியும் தெறிக்க விட்ட தினகரனும்!..


Gajalakshmi Oneindia Tamil சென்னை : சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு டிடிவி தினகரன் கடும் கொந்தளிப்புடன் பதில் அளித்துள்ளார். விவேக்கிற்கு என்ன சொத்து என்று தெரியாமலே அவருக்கு இவ்வளவு சொத்தா என்று விஷமத்தனமான கேள்வி கேட்கப்படுவதாக தினகரன் பேட்டியின் போது டென்ஷனாகிவிட்டார். தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தினகரன், நெறியாளருடன் வருமான வரி சோதனை குறித்த கேள்விகளுக்கு மல்லுக்கட்டியது தான் இன்றைய மீடியா உலகின் ஹாட் டாபிக்.  நேர்காணலில் தினகரன் கூறியதாவது : என் வீட்டில் பாதாள அறை இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்தது அது உண்மையா? ஊடகத்தில் வருவதெல்லாம் தெய்வ வாக்கா, உச்சநீதிமன்ற தீர்ப்பா? ஒரு தகவல் எல்லோரும் சொன்னால் அது உண்மையாகிவிடுமா.
என்னுடைய புதுச்சேரி வீட்டில் பாதாள அறையில் இருந்து வைரக் குவியல் எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன, என் வீட்டில் ரெய்டு என்று சொன்னீர்கள். ரூ. 1400 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் சொல்கின்றன அதிகாரப்பூர்வமான வருமான வரித்துறை ஏதேனும் சொல்லி இருக்கிறதா?. 
ரெய்டு முடிந்ததும் திவாகரனிடம் பேசினேன், அவர் வருமான வரி சோதனையால் ஒன்றும் பிரச்னையில்லை, கல்லூரியின் சில கணக்கு வழக்குகளை அதிகாரிகள் ஏற்கவில்லை அதை வருமான வரி அலுவலகத்தில் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். யாருக்கும் பாதிப்பு இல்லை யாருக்கும் பாதிப்பு இல்லை இதே போன்று டாக்டர் வெங்கடேஷ் என்னை சந்தித்தார், அவரும் சோதனையால் எந்த பிரச்னையும் இல்லை. வீட்டில் இருந்த சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாகச் சொன்னார். டாக்டர் சிவக்குமாரும் அதையே தான் சொன்னார், விவேக்கும் வருமான வரி சோதனையால் பாதிப்பு இல்லை என்றார். 
ஏன் இப்படி கேள்வி? விவேக்கிற்கு சொத்து இருக்கிறது என்று தெரியுமா ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறார், ஆனால் அதை வைத்து மட்டுமே அவருக்கு இவ்வளவு சொத்துகள் என்று சொல்லிவிட முடியுமா. அவருக்கு அந்த நிறுவனத்தில் பங்கு இருக்கிறதா என்று எதுவுமே தெரியாமல் எப்படி இவ்வளவு சொத்துகள் என்று கேள்வி எழுப்புகிறீர்கள். 
விஷமத்தனமான கேள்விகள் விஷமத்தனமான கேள்விகள் விவேக்கிற்கு அந்த நிறுவனங்களில் பங்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பாமல், அவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள். தினகரன் என்ன தொழில் செய்தார் அரசியல் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்பு என்று நேரலையில் கேள்வி கேட்கிறீர்கள், நான் எம்பியாக இருந்தேன் அதற்கான பென்ஷன் பெறுகிறேன். எங்களை நோக்கி வரும் கேள்விகளே விஷமத்தனமாகத் தான் இருக்கிறது. 
மக்கள் மனதில் திணிக்கப்படுகிறது மக்கள் மனதில் திணிக்கப்படுகிறது ஊடக சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது. என்னுடைய வாழ்க்கை முறையைப் பற்றியெல்லாம் கூட விமர்சனம் வைக்கப்பட்டது. மக்கள் மனதில் தோன்றும் கேள்விகள் அல்ல, இது போன்ற விஷமத்தனமான கேள்விகள் விதைக்கப்படுகின்றன. 
தெறிக்க விட்ட தினகரன் சசிகலா குடும்பத்தினர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவை கேள்வியே கேட்க விடாமல் திணறடித்தார் தினகரன். அவர் கேள்வி கேட்க வரும்போதெல்லாம் தந்தி டிவியில் என் வாழ்க்கை முறை பற்றியெல்லாம் கேள்வி எழுப்புகிறீர்கள், ஏன் பொதுவாழ்வில் அப்படி இருக்கக் கூடாது என்று கேட்டார். இறுதியில் ரங்கராஜ் பாண்டே தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது நோக்கமல்ல மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்

//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: