tamiloneindia :என்னையும், மகள் போஷிகாவையும் அறையில் பூட்டி தீவைத்து கொலை செய்ய முயன்றார் என்று தாடி பாலஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார். மாடியில் இருந்து எட்டி உதைத்து என்னை கொலை செய்ய முயன்றார் என்றும் நித்யா பரபரப்பு புகார் என்று கூறியுள்ளார். திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர் மகள் போஷிகாவுடன் மாதவரம் அருகே பூம்புகார் நகரில் வசித்து வருகிறார்.
நடன கலைஞரான நித்யாவை, தாடி பாலாஜி காதலித்து திருமணம் செய்தார். காதல் திருமணம் கசந்து விட்டது. இருவரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்து வருகின்றனர். புகார்கள் குறித்தும் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, இன்ஸ்பெக்டர் அமலா ரத்தினம் கடந்த 10ம்தேதி முதல் 13ஆம் தேதி வரை தாடி பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், தாடி பாலாஜியின் மனைவி நித்யா நேற்று, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது பரபரப்பு புகாரை அளித்தார்.
குடித்து விட்டு அடிக்கும் கணவர் எனது கணவர் தாடி பாலாஜி குடித்துவிட்டு என்னை அடித்தும், சந்தேகத்துடன் ஆபாசமாகவும் பேசி வருகிறார். காவல் நிலையத்திற்கு எங்கள் பிரச்னை வருவதற்கு முன் என்னையும், மகள் போஷிகாவையும் அறையில் பூட்டி தீவைத்து கொலை செய்ய முயன்றார்.
போலீசில் புகார் மாடியில் இருந்து எட்டி உதைத்து என்னை கொலை செய்ய முயன்றார். இதன் பிறகுதான் நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாலாஜி மீது புகார் அளித்தேன்.
அப்போது அவரது நண்பர் நவீன், எனக்கு உதவி செய்வது போல் நடித்து தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து நவீன் மனைவியிடம் கூறினேன். இதனால் நவீன் எனது கணவருடன் சேர்ந்து பழிவாங்கி வருகிறார்.
கடந்த மாதம் 22ம் தேதி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளேன். கள்ளத் தொடர்பு புகார் இதை தெரிந்து கொண்ட பாலாஜி அவசர அவசரமாக கடந்த 27ம் தேதி என்னை வேறு ஒரு நபருடன் தொடர்பு படுத்தியும், எனக்கு உதவி செய்ய வந்த எஸ்ஐ. மனோஜ்குமார் மிரட்டியதாகவும் போலியாக ஒரு குரல் பதிவை தயார் செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் மிரட்டல் பாலாஜி அளித்த புகாரில், எந்த உண்மையும் இல்லை. என்னிடம் இருந்து எனது மகளை பிரிக்க அவர் முயற்சி செய்கிறார்.
வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அமலா ரத்தினம் ஒருதலைபட்சமாக என்னை மட்டும் மிரட்டி எழுதி வாக்குமூலம் வாங்குகிறார். இல்லையென்றால், என் மீது எப்ஐஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டுகிறார்.
மிரட்டும் பாலாஜி பாலாஜிக்கு காவல் துறை துணையாக உள்ளது. மேலும், பாலாஜியுடன் சேர்ந்து வாழ கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். நான் அதற்கு மறுத்தால் கடுமையாக மிரட்டுகின்றனர்.
ஏன் என்றால் நான் வசித்து வரும் வீட்டிற்கு வந்த பிறகுதான், பாலாஜிக்கு அதிகளவில் வாய்ப்பு கிடைத்தது என்ற நம்பிக்கையில் எப்படியாவது என் வீட்டை அபகரிக்கும் வகையில் சேர்ந்து வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறுகிறார்.
சேர்ந்த வாழ வேண்டாம் பாலாஜியுடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. தன் மனைவியை வேறு ஒருவருடன் சேர்த்து பேசிய பாலாஜி, தற்போது சேர்ந்து வாழ அழைக்கும் மர்மம் என்ன? நான் சட்டப்படி விவாகரத்து பெற்று குழந்தையுடன் தனித்து வாழ்வேன் என்று கூறியுள்ளார் நித்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக