தமிழகத்தில் பல இடங்களில் எம்.எல்.ஏக்களை காணோம் என்று பொதுமக்கள் போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக அதிமுகவில் உட்கட்சி சண்டையால் எம்.எல்.ஏக்களை பல இடங்களில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர். இதனால் தொகுதியில் பணிகள் எதுவும் சரிவர செயல்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொகுதி மக்கள் எம்.எல்.ஏக்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீரங்கம்,பெரியகுளம், நிலக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில் பொதுமக்கள் எம்.எல்.ஏக்களை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக