செவ்வாய், 18 அக்டோபர், 2011

கனடாவில் செல்வியின் பெயரால் கள்வனே கள்வனைத் தேடிய நாடகம்!

selvi
பாசிச புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, பெண் புலிகளால் மனிதகுலம் வெட்கித் தலைகுனியுமளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு, அந்த ஏழை கிராமப்புற பிள்ளையை நார் நாராகக் கிழித்து படுகொலை செய்த, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியான செல்வி (செல்வநிதி தியாகராசா) அவர்களுக்கு, கனடாவில் 2011 அக்டோபர் 16ம்திகதி நினைவுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. செல்வி 1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ந் திகதி யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் அருகிலுள்ள அவரது வீட்டிலிருந்து புலிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவருக்கு யாரும் நினைவஞ்சலிக் கூட்டம் நடாத்தவில்லை. இப்பொழுது மட்டும் ஏன் இந்தக் கூட்டம் என்பது தெரியவில்லை.
இந்தக் கூட்டத்தை கனடாவில் உள்ள சிலர் ஒழுங்கு செய்வதாகத்தான் வெளியில் சொல்லப்பட்டது. அதுபற்றிய சில ஊடக விளம்பரங்களிலும் செல்வியை யார் கடத்தியது என்று போடாமல், மொட்டையாக, “கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட செல்விக்கு அஞ்சலிக் கூட்டம்” என விளம்பரம் செய்யப்பட்டதுடன், அந்தக் கூட்டத்தை யார் நடாத்துவது என்பதும் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவதற்காகவும், பேசுவதற்காகவும் தமது வாழ்நாளையே பாசிசப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் அர்ப்பணித்த சில முக்கியஸ்தர்கள் அணுகப்பட்டார்கள். மிகவும் உரிமையுடனும் ஆக்ரோசமாகவும்கூட அவர்கள் அணுகப்பட்டார்கள்.
ஆனால் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் மத்தியிலிருந்து கிடைத்த தகவல் மற்றும் தமது சொந்த வளங்கள் மூலம் கிடைத்த விபரங்கள் மூலம் இந்தக்கூட்டம் திட்டமிட்ட ஒரு சதி வேலை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். செல்வியைக் கொலை செய்தவர்களின் பினாமியாகச் செயற்படும் சிலரே இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்கிறார்கள் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, அந்த பிரமுகர்கள் கூட்டத்தில் பங்குபற்றாது, தமது நிலைப்பாட்டை கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கிவிட்டு விலகிக் கொண்டார்கள்.
பின்னர் கிடைத்த தகவல்களின்படி, புலிகளின் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கூட்டத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்ததாகத் தெரிய வருகிறது. அதற்கான காரணங்களும் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டாலும், புலம்பெயர் நாடுகளில் புலிகள் பல காரியங்களைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக புலிகளின் எதிர்ப்புரட்சிகர செயல்பாடுகளை புலம்பெயர் நாடுகளிலுள்ள முற்போக்கு – ஜனநாயக சக்திகள் உரிய முறையிலும் துணிகரமாகவும் முகம் கொடுத்து பதிலடி கொடுத்து வருவதால், புலிகள் தற்பொழுது இந்த சக்திகளுடன் உறவாடும் சில உதிரிகளை தமது தேவைகளுக்குப் பயன்படுத்த முயன்று வருகிறார்கள். ஆனால் தகுந்த நேரத்தில் அந்த சக்திகள் நிலைமையை சாதுரியமாகக் iயாண்டு அவர்களது சதியை முறியடித்துவிட்டார்கள்.
இதில் ஒரு நல்லதும் மெச்ச சேண்டியதுமான விடயமென்னவெனில், சுமார் 30 பேர் வரையில் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில், எந்தவொரு நல்ல மனிதரும் பங்குபற்றவில்லை. அமைப்பு ரீதியாகப் பார்த்தால் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் என யாருமே பங்குபற்றவில்லை. பங்குபற்றியவர்கள் எல்லோருமே புலிப் பினாமிகள்தான். கனடாவில் இரண்டு அணிகள் தெளிவாக இனங்காணப்பட்டுள்ளன. ஒன்று, தமிழ் தேசிய வெறி, புலிச்சார்பு சக்திகள். மற்றது, முற்போக்கு ஜனநாயக சக்திகள். சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒருபோதும் ஒட்ட முடியாது.
செல்வியை கடத்திச் சென்று படுகொலை செய்த சக்திகளே அவருக்கு நினைவுக்கூட்டம் நடாத்தும் அயோக்கியத்தனம் நடந்துள்ளது. இது போன்ற கபட முயற்சிகளை மற்றைய நாடுகளிலும் புலிகள் அரங்கேற்ற முயற்சிப்பார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. ஏனெனில் இலங்கையில் முற்று முழுதாக அழிக்கப்பட்ட புலிகள், புலம்பெயர் நாடுகளிலும் அழிவைச் சந்தித்து வருவதைத் தடுக்க முயற்சிப்பார்கள். அதற்கு சில நல்ல சக்திகளையும் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதற்கு இந்தக் கனடியக் கூட்டம் ஒரு உதாரணம்.
கனடாவில் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் சதிக்கு இரையான நல்ல சக்திகள் விழித்துக் கொள்வதும் அவசியம்.
- செல்வியின் நண்பர் குழாம் - கனடா

கருத்துகள் இல்லை: