செவ்வாய், 18 அக்டோபர், 2011

அஞ்சாநெஞ்சுடன் ஆணித்தரமாய் அரசியல் பேசியவனின் அஸ்தமனம்!

புலம்பெயர் நாடுகளில் வைசி என அறியப்பட்ட சமூக ஆர்வலரும்  அரசியல் விமர்சகருமான அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்களின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும்.(18.10.2011)
அவர் தான் வாழ்ந்த காலங்களில் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை முன் வைப்பவராகவும் செயற்பட்டார்.
இணையத்தளங்களில் தனது சமூகப் பார்வையுடனான கருத்துக்களை பதிவிட்டு வந்தவர். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் செயற்பட்ட வானொலிகளில் சுவிஸ் நாட்டில் விடுதலைப் புலியமைப்புக்களின் சமூகவிரோதச் செயற்பாடுகள் தொடர்பான தனது கடுமையான விமர்சனத்தையும்  தனது சொந்தப் பெயரிலேயே முன் வைத்தவர்.
ஐரோப்பாவின் 24 மணி நேர முதல் தமிழ் வானொலியான ரிஆர்ரி தமிழ்ஒலி  தமிழ்அலையாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட பின்னர் திரு.உதயகுமாரினால் நடத்தப்பட்ட அரசியல் அரங்கம் என்ற நிகழ்ச்சியில் தனது துணிச்சலான கருத்துக்களை முன் வைத்து நேயர்கள் பலரது மனதிலும் இடம் பிடித்திருந்தார்.
டான்யாழ் ஒளி தொலைக்காட்சியின் பார்வையில் நிகழ்ச்சியிலும் தனது ஆணித்தரமான கருத்துக்களை ஆளுமையுடன் முன் வைத்து நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர். இன்றும் அவரது குரல் செவிப்பறைகளை தட்டிச்செல்கின்றது.
அவரது இழப்பு சமூகஅக்கறை கொண்டவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.
இன்று அவரது ஓராண்டு நினைவு நாளில் ரிஆர்ரி தமிழலை வானொலி, டான்யாழ் ஒளி நேயர்கள் அவரை நினைவுகூருவதுடன் அவரது ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றனர்.
சலசலப்பு நிர்வாகமும் தனது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்வதுடன் ஆத்மாசாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றது

கருத்துகள் இல்லை: