ஞாயிறு, 16 அக்டோபர், 2011

டான்ஸ் மாஸ்டர் சலீம் மரணம்300 படங்களுக்கு மேல்


300 படங்களுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் சலீம் மரணம்300 படங்களுக்கு மேல் நடனம் அமைத்த சினிமா டான்ஸ் மாஸ்டர் சலீம், சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், திலீப்குமார், ராஜ்குமார் போன்ற பழம்பெரும் கதாநாயகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்தவர், சலீம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கும் இவர் நடனம் அமைத்து இருக்கிறார்.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த `இளைமை ஊஞ்சலாடுகிறது` படத்தில், ``தண்ணி கருத்திருக்கு`` என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததுடன், அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் இருந்தார்.
சிவாஜிகணேசன் நடித்த `வியட்நாம் வீடு` படத்தில் இடம்பெற்ற ``பாலக்காட்டு பக்கத்திலே`` என்ற பாடலுக்கும் சலீம் நடனம் அமைத்திருந்தார்.
கடைசியாக அவர், `கேப்டன் பிரபாகரன்` படத்தில் இடம்பெற்ற ``ஆட்டமா தேரோட்டமா`` என்ற பாடலுக்கு நடனம் அமைத்தார்.

300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் பணிபுரிந்தார். 20 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்து இருந்தார்.
மரணம் அடைந்த சலீமுக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள். அவருடைய உடல் அடக்கம், சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.

கருத்துகள் இல்லை: