வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் தமிழ் போராளிகள் 158 பேர் நேற்றுக் காலை தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்பட்டு, பெற்றோர்கள் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பம்பைமடு, பூந்தோட்டம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், நெளுக்குளம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து இவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த இடங்களில் உள்ள புனர் வாழ்வு நிலையங்களுக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்புப் படையினர் இவர்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக