செவ்வாய், 22 செப்டம்பர், 2020

ஒருங்கிணைந்த இந்தியா என்றால் ... உன் மொழி அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் மொழியை நீ கற்க வேண்டும்.....

Sundar P : · ஒருங்கிணைந்த இந்தியா என்றால் என்ன..?... படித்த வட இந்தியர் யாரிட‌மாவ‌து இந்த கேள்விகளைக் கேட்டுப்பாருங்க‌ள் இப்ப‌டித்தான் ப‌தில் வ‌ரும் கேள்வி - வீரபாண்டிய கட்டபொம்மனை
தெரியுமா ?
-. அது யாரு ?
கேள்வி - பாரதியாரை தெரியுமா ?
பதில் - கேள்விப்பட்டதே இல்லையே
கேள்வி - வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...?
பதில்: நோ
கேள்வி - திருவள்ளுவரைத் தெரியுமா..?
பதில் - நகி..நகி
கேள்வி - வாஞ்சிநாதன் கேள்விப்பட்டி
ருக்கிறாயா ?
பதில் - இல்லையே
கேள்வி - மருது பாண்டியர்களையாவது அறிவாயா..?
பதில் - நோ ப்ரோ
கேள்வி - முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..?
பதில் - நஹி பைய்யா
கேள்வி - கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரமாவது ..?
பதில் - கிடையாது ஜி.
கேள்வி : சிவ பெருமான் பிள்ளை முருகனையாவது தெரியுமா...?
பதில் - சிவ பெருமானுக்கு விநாயகர் மட்டும்தானே பிள்ளை..? முருகன் யாரு? கேள்விப்பட்ட‌தே இல்லையே...!
(இப்போது ஒரு தமிழரிடம் இப்ப‌டி கேட்டுப்பாருங்க‌ள்...)
கேள்வி: ஜான்சி ராணி தெரியுமா..?
பதில் : தெரியுமே
கே: மராட்டிய சிவாஜி தெரியுமா..?
பதில்: ஏன் தெரியாது மாபெரும் வீரர்
கே: சர்தார் வல்லபாய் படேல் தெரியுமா..?
பதில் : நல்லாவே தெரியும், டெஸ்ட் பண்றீங்களா...
பகத் சிங் கை தெரியுமா
ஏன் தெரியாது
ஆக‌, உன்னையும் உன் முன்னோரையும் பற்றி வடநாட்டானுக்கு ஒன்றும்
தெரியாது.
ஆனால் அவர்களை பற்றி நீ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
உனக்கு அவ்வாறுதான் போதிக்கப்பட்டுள்ளது, க‌ற்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
மொழியும் அப்படித்தான்..!
உன் மொழி அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் மொழியை நீ கற்க வேண்டும்.....
புலனத்தில் வந்தது..

கருத்துகள் இல்லை: