பீகார்
மாநிலத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.2 கோடியில் இருந்து 7.2 கோடியாக
உயர்ந்துள்ளது. மொத்தம் 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர். 16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பீகார் மாநில
சட்டமன்றத் தேர்தலின்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் வாக்குப்பதிவு ஒரு
மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை
வாக்குப்பதிவு நடைபெறும். இருப்பினும், இது இடதுசாரி ஆயுதக் குழுக்களால்
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது. ஒரு வாக்குச்சாவடிக்கு 1500
வாக்காளர்கள் என்று இருந்ததை இப்போது 1000 வாக்காளர்களாக குறைத்துள்ளோம்.
பீகார்
மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அக்டோபர் 28, நவம்பர் 3
மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படும். 3 கட்ட
தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்
அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக