BBC ": இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி (65) இன்று உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது. சுரேஷ் அங்காடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கர்நாடகா மக்களுக்காக அயராது உழைத்தவர் அவர் என்று கூறியுள்ளா.
கர்நாடகாவின் பெல்காம் தொகுதி கே.கே. கொப்பா பகுதியில் 1955ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பிறந்தார் சுரேஷ் அங்காடி. அதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2019இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் சுரேஷ் அங்காடி. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அவர், பெல்காம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் ஆரம்ப காலம் தொட்டு பணியாற்றினார்.
2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் வென்று தொடர்ச்சியாக நான்காவது முறையாக வென்ற எம்.பிஆக விளங்கினார்.
Velmurugan Balasubramanian : ரதயாத்திரை நடத்தி ரத்த ஆறு ஓட காரணமான அத்வானி சொந்த கட்சியாலேயே அசிங்கப்படுத்தப்பட்டு, இன்று இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக