ஆனால் அவ் இலக்கை அடையவிடாது தடுத்தவன் வேறு யாருமில்லை பொட்டம்மான் எனும் சுயநலவாதி
எதிரியின் பாரிய படைத்தள மையமாக கருதப்பட்ட யாழ் குடாநாட்டை தலைவர் அவர்கள் 2000மாம் ஆண்டு தான் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் கைப்பற்றியிருந்தால் நிச்சயமாக நாம் தமிழீழம் எனும் தனியரசை அன்றே உருவாக்கியிருக்க முடியும்.
ஆனால் அதை தனது ஏகாதிபத்திய வெறியினாலும், தான் என்ற சுயநலமான பதவி ஆசையினாலும், தன்னைவிட வேறு எந்த தளபதிகளும் முன்னுக்கு வரக்கூடாதென்ற பொட்டம்மானின் நயவஞ்சக குணத்தினாலுமே அன்று கிழக்கு படையணிகளால் யாழ் குடாநாட்டை கைப்பற்றமுடியாமல் போனதற்கான முதன்மை காரணம்.
இல்லையென்றால் அன்றே தளபதி கருணாவின் தலைமையில் யாழ் நகரம் கைப்பற்றபட்டிருக்கும்
பலாலி படைத்தளம்கூட ஆனையிறவின் தயவினில்தான் இருந்ததே அன்றி,பலாலி படைத்தளம் ஒரு பெரிய இலக்காக அந்நேரம் புலிகளுக்கு இருந்திருக்கவில்லை.
மேலும் ஆனையிறவின் அபாரமான வீழ்ச்சியின் ஊடாக புலிகள் யாழ்நகர் நோக்கிய தாக்குதலை உடனடியாகவே மேற்கொள்ளக்கூடிய போதிய ஆளணியுடனும், போதிய அளவிலான ஆயுத பலத்துடனும் இருந்தபொழுதுதான் பொட்டம்மானின் கபட நாடகம் வன்னியில் அரங்கேறியிருந்தது.
பொட்டம்மானின் ஆரம்பகட்ட சூழ்ச்சியின் வெளிப்பாடாகத்தான் அன்று கிழக்கு போராளிகள் உற்பட தளபதி கருணா அம்மானும் உணர்ந்து கொண்டார்கள் ஏன் என்றால் யாழ்நகரை பிடித்த பெருமை சார்ஸ் அன்ரனிக்கு படையணிக்கு வர வேண்டும் என்பதில் யாழ் ஏகாதிபத்திய மனநிலை கொண்ட தளபதிகள் கண்னும் கருத்துமாகா இருந்தார்கள்
இதன்காரணமாகத்தான் வடபோரரங்கில் ஆனையிறவை வீழ்த்தி யாழ்நகர் நோக்கிய தாக்குதலை தொடுப்பதற்கு தயார்நிலையிலிருந்த ஜெயந்தன்,அன்பரசி படையணி போராளிகள் பாரிய ஏமாற்றத்துடன் மணலாறு காடுகளை நோக்கி கேணல் கருணாவின் தலைமையில் நகர்ந்தார்கள்
பொட்டம்மானின் சூழ்ச்சியாலும் பேராசையாலுமே புலிகள் அழிந்து போனார்கள் என்பதே உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக