வியாழன், 24 செப்டம்பர், 2020
கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
thinaboomi : கொரோனா தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டை தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதில் முதல் நாடாக ரஷ்யா கடந்த மாத ஆரம்பத்திலேயே தடுப்பூசி ஒன்றை உருவாக்கியிருந்தது.
ரஷ்யாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான மருந்துகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகெயில் முராஸ்கோவை, உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் சந்தித்து பாராட்டியுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற்
காக ரஷியாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக