· டிகோடட் நந்தனார் படம் நெருப்பு புகல் ஜோதி மயமாதல்
பக்த நந்தனார் (1935) என்ற ஒரு பழம் பெரும் திரைப்படம் கே. பி. சுந்தராம்பாள் சுமாருக்கு 19 பாடல்கள் பாடி நடித்த படம் என்று கேள்விப்பட்டு வரலாறு அறிவோம் என்ற திட்டத்தில் தேடினேன்.
Devanurpudur DrAnbu Selvan : எனக்கு இந்த ஐயம் படம் பார்த்த நாள் முதலாக உண்டு. வருகலாமோ ஐயா..என்ற பாடலுக்காகவும், தண்டபாணி தேசிகரின் குரலிசைக்காகவும் பல முறைகள் பார்த்ததுண்டு.
வள்ளலாரையும் இப்படித்தான் 🔥 தீவைத்துக் கொன்றுவிட்டு, அவரை ஒளியாக மறைந்தார் என்று சொல்லிவிட்டனரோ என்றும் தோன்றும். ஆயினும், பிரிட்டிஷ் கலெக்டர் முன்பாக சித்திவளாகத்துக்குள் நுழைந்தவர் மீளவில்லை என்ற குறிப்புதான் இடறுகிறது. இது பொய்யானால், பிரிட்டிஷ் அரசும் பார்ப்பனியமும் சேர்ந்து வள்ளலாரை அழித்திருக்கலாம். தில்லைவாழ் அந்தணரால் எல்லையிலாத் தொல்லை பெற்றேன் என்று எழுதிய வள்ளலாரை விட்டுவைத்திருப்பார்களா??
A Prabhakar TheKa : நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது இது போன்ற காட்சிகள் திரைப்படங்களின் வழியாக, அதிரும் மணியோசைகளுக்கிடையேயும், அசைந்தாடும் விளக்குகளுனூடேயும் ஒருவர் 🔥 புகுந்து மறுமுனையில் ஒளியாக எழுந்து, கற்சிலையோடு கரைவதைப் போல காட்டும் போது ஆகா, ஒகோவென பார்த்துவிட்டு வரலாம். தவறில்லை. அதற்கான வாசிப்போ, சுயமாக சிந்திக்கும் பக்குவமோ, பழக்கமோ இல்லாததால் நடைபெறுகிறது என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், ஏரணம் (லாஜிக்) புரிந்த காலத்தில் அதற்கான convincing factsகளை தேடிப்போனால் இன்று நாம் வந்தடைந்திருக்கும் இடத்திற்கு வந்து நிற்போம். சான்றுகளை அழிப்பதில் 🔥🔥 பெரும்பங்காற்றுகிறது என்பது இது போன்ற கதைகளின் மூலம் தெளிவாகுகிறது. மாணிக்கவாசகர் ==> நந்தனார் ==> வள்ளலார் ==> கே. பி. சுந்தரம்பாளோட பக்தி நந்தனார் திரைப்படம் வரைக்குமே கூட interestingly enough தீ உறவாடி இருக்கிறது.
A Prabhakar TheKa : //ஒருநாள், சிதம்பர ஸ்தலத்திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு, அவ்வாசை மிகுதியினாலே அன்றிரவு முழுதும் நித்திரை செய்யாதவராகி, விடிந்தபின் "நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே" என்று துக்கித்து, "இதுவும் சுவாமியுடைய அருள்தான்" என்று சொல்லிப் போகாதொழிந்தார். பின்னும் ஆசைவளர்தலால் "நாளைக்குப் போவேன்" என்றார். இப்படியே "நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன்" என்று அநேக நாட்கள் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.// இந்த நைச்சியமான திரிப்பு சொற்களில் இடைவிடாத தொடரும் ஒரு கேள்வி இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் சென்று தரிசிக்க ஆசைப்பட்டவரை தில்லைக்கு மட்டும் போக விடாமல், யார், எது தடுத்தது. இறைவனுக்கு முன்னால் அனைத்து ஜீவாத்மாக்களும் ஒன்றுதான் என்றால், நான் "யோக்கியதை அற்றவன்" என்று யார் விதித்தது? அந்த சாட்சாத் சிவபெருமான் தான் இவரை தீ புகுந்து வந்து அந்தணர் போல நிரூபித்து காட்டி விட்டு உள்ளே வா என்று கூறினால், அவர் என்னய்யா கடவுள் என்று கேள்வி கேட்க தோன்றவில்லை? இந்தக் கொடுமையை மேலும் அறிய-
Kannan Govindaraju : கொலைக்கு ஜோதி, ஐய்க்கியம் சமாதி என்றெல்லாம் பெயர் வைப்பார்கள், அதெல்லாம் ஏன் தற்போது நடைபெறுவதில்லை தில்லைவாழ் அந்தணர் 3000 பேரை கயிலையில் இருந்து சிதம்பரத்திற்கு ஆகாய வழியில் இட்டாந்தாராம். அந்த 3000ல் பெண்டுக யாரும் இல்லை ஞான சம்பந்தனின் புனிதம் கெடும் என்று எண்ணி அவன் திருமணத்தை ஏற்காமல் மண்டபத்தை கொளுத்தி கொன்ற பாவிகள் அன்று என்ன சொல்லி இருப்பர் ? கடவுள் அந்த திருமணத்தை ஏற்கல அக்னி பகவானை ஏவி அழித்துட்டார். உருவ வழிவாடு உருவமற்ற வழிபாடு குழப்பி குளிர்காய்ந்தவன் ஆதிசங்கரன் அவன் எழுதியெல்லாம் பவுத்த திருட்டு
Kathir Krishnamurthi : தர்க்கம் பண்ணி தோற்று ஓடினார்கள் ஆதி சங்கரிடம் என்றால் 'கதையை முடித்து சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டான் சனாத்தனப் பார்ப்பான்' என்றே குறியவிழ்க்க..
Kannan Govindaraju : நந்தனாருக்கு காட்சி கொடுக்க விரும்பி இருந்தால் அதை அவன் கிராமத்தில் இருக்கும் போதே செய்திருக்கலாம், ஆனால் கோயிலுக்கு வரவழைத்து தீயில் இறக்கி... நந்தனாருக்கு நடத்திய தீயிறங்கும் சோதனையை தில்லைவாழ் அந்தணனர்களுக்கும் நடத்துங்கள் என்று வலியுறுத்ததாதவரை நந்தனார் கதை சிலாகிக்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக