வியாழன், 6 ஜூன், 2019

அமெரிக்க தமிழ் பள்ளிகளில் சில பார்பனீய மனுதர்ம போதனைகள் ..?

Hema Sankar : அமெரிக்காவில் இயங்கும் தமிழ் பள்ளிகளில் ஒன்று இந்த குருகுலம்( குருகுல் ).
குருகுலம்- உயர் சாதி பிராமணர் மட்டுமே அங்கேயே தங்கி குருவிடமிருந்து கல்வி ( வேதம், கணிதம், அறிவியல்) பயிலும் இடம்.
இதன் பெயரை தமிழ் பள்ளிக்கு வைத்து கோவில்களில் நடத்திக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.. இந்த பள்ளியில் தமிழ் மட்டும் இல்லை, தமிழுடன் சேர்த்து கடவுளையும், பக்தியையும், சமஸ்கிருத ஸ்லோகத்தையும் சொல்லி தருகிறார்களாம்.. இதை நடத்துவோர் முற்றிலுமாக பார்ப்பணர்கள்.
தமிழ் பள்ளியில் சமஸ்கிருத ஸ்லோகம் எதற்கு, அதுவும் குருக்குலம் என்று பெயர் வைத்த பிறகும் இந்த பள்ளியில் சேர்க்கின்றனர் பெற்றோர்கள். படித்து இங்கு வரும் பெற்றோர்களே குழந்தைங்களிடம் சுயமரியாதையை சொல்லி தர தவரி, தமிழ் என்று சமஸ்கிருத பார்பனிய சிந்தனையை வளர்க்கிறார்கள்.
இங்க கோவில்களில் அவர்களுக்கென்று தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார்கள்.. ஆனால் இதை எல்லாம் கண்டும் காணாமல் அடிமை கூட்டமாக இருக்கின்றனர் பலர். சாதிக்கு ஒரு சங்கம் இருக்கு.
இதையெல்லாம் நாம கேட்டுட்டா, பொம்பள நீ பேசனா உன் பின்னாடி ஆளுங்க வருவானுங்கனு பேசறியானு கேக்கறானுங்க.. கொஞ்சம் கூட சோத்துல உப்பு போட்டே திண்ண மாட்டீங்களாடா.. படிச்சவனுங்க தான நீங்கல்லாம். கருத்து சுதந்திரம், பாலியல் சுதந்திரம், பகுத்தறிவு பேசும் லிபரல்ஸ் அதிகம் இருக்க நாட்ல கூட இப்டி இன்னும் அடிமைங்களா தான் வாழ்வீங்களானு தோணும்.

இதுல ஒரு அம்மா என் கிட்ட உங்க பைய்யன ஸ்லோகம் க்ளாஸ் அனுப்புங்க, தமிழ் நல்லா வரும் , நியாபக சக்தி நல்லா இருக்கும்னு ரெக்கமெண்ட் பண்ணுது.. இங்க வந்தும் பார்ப்பானுங்க உங்க கிட்ட பீஸ் வாங்கிட்டு உனக்கு சம்மந்தமே இல்லாத சடங்கு, ஸ்லோகத்த , உன் கிட்ட பிராண்டிங் பண்ணி திணிச்சிட்டு இருக்கான்.
பிகு: எளிய தமிழ் தம்பீஸ் குரூப்பும் இங்க அதிகம். பாத்துக்கோங்க.. ஒரு பக்கம் சங்கீஸ், ஒரு பக்கம் தம்பீஸ் , இவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டு இங்க பகுத்தறிவு பேசறவங்க நிலைமைய.

கருத்துகள் இல்லை: