வியாழன், 6 ஜூன், 2019

விபத்தை உருவாக்கி 106 பவுன் கொள்ளை... திட்டமிட்ட விபத்து .. தந்திர திருட்டு .. கோவையில்


​ robbery
​ robbery nakkheeran.in - kalaimohan : கோவை ராம்நகரில் நகை பட்டறையில் வேலை பார்க்கும் நபரை மோட்டார் சைக்கிளில் மோதி வேண்டுமென்றே விபத்து உருவாக்கி அவருக்கு உதவி செய்வது போல் அவர் கையிலிருந்த 106 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். கோவை கடைவீதி பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் சுரேஷ், இவரிடம் பணியாற்றுபவர் ராமமூர்த்தி இவர் சுரேஷிடம் இருந்து 106 சவரன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு தாராபுரத்தில் உள்ள நகை கடைக்கு கொடுப்பதற்காக சென்றுள்ளார். காந்திபுரம் நோக்கி ராம் நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஒருவர் வேண்டுமென்றே அவரது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த இரு சக்கர வாகனத்தில் பின்பக்கம்  இருந்தவர் கீழே விழுந்தவரை காப்பாற்றுவது போல் இறங்கி அவருக்கு உதவி புரிந்துள்ளார்.



அப்பொழுது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் விபத்து நடந்தது கண்டு ராமமூர்த்திக்கு உதவுவதை போல் பாவனை செய்தனர். அவர்களுடன் விபத்தை ஏற்படுத்தியவரும் அவருக்கு உதவி செய்ய முயன்றார். இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூடியதால் அருகில் உள்ள கடை வாசலில் அமர்ந்து இளைப்பாற வைப்பதற்காக ராமமூர்த்தியை கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு செல்ல முயல்வதுபோல ராமமூர்த்தி கையில் வைத்திருந்த பேக்கை எடுத்துக்கொண்டு விபத்தை ஏற்படுத்தியரே உதவுவது போன்று நடித்தார். 

​ robbery

ஆசுவாசப் படுத்த அழைத்துச் செல்வது போல் நைசாக அவரது கைப்பையை விபத்து ஏற்படுத்தியவர் கையிலேயே வைத்திருக்க முயற்சி செய்தார். இருப்பினும் அதனை உணரந்த ராமமூர்த்தி கைப்பையை உடனடியாக பெற்றுக்கொண்டார். இருப்பினும் சிறிது நேரம் கழித்து அவரிடம் இருந்து அதேபோல கைப்பையை நைசாக எடுத்துக்கு கொண்ட கொள்ளையன் ஹெல்மெட்டையும் கையில் பிடித்துக் கொண்டு அவரை கைத்தாங்கலாக ஒரு கடையின் வாயிலில் அமர வைக்க முயற்சி செய்தான். அப்படியே கூட்டத்தில் இருந்து  நகை பையை சப்தமின்றி நைசாக தூக்கிக்கொண்டு வெளியே அவனுக்காக காத்துகொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பித்தான். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

​ robbery

அதில் ஒருவன் தேனியைச் சேர்ந்த ராஜா என கண்டறிந்த போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நகை பட்டறை தொழிலாளியான பத்ரி  மற்றும் அவரது நண்பர்கள் டேனியல், விக்கி, சங்கீதா ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்யத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: