புதன், 5 ஜூன், 2019

ஒரே டம்ளரில் காபி, டீ என 5 சுவை கோவையில் கலக்கும் டீ மாஸ்டர் மாணிக்கம் .. வீடியோ

Vishnupriya R   tamil.oneindia.com கோவை: கோவை மாவட்டம், துடியலூர் அடுத்துள்ள கணுவாய் பகுதியில் ஒரே டம்ளரில் டீ, காபி, பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ் மற்றும் பிளாக் காப்பி என லேயர் லேயராக டீ போட்டு அசத்தி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. 
துடியலூர் கணவாய் பகுதியை சேர்ந்தவர் டீ மாஸ்டர் மாணிக்கம் (56). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் நடைபெற்று விட்டது. மாணிக்கம் பல்வேறு கம்பெனிகளுக்கு டீ கொண்டு சென்று சப்ளை செய்வது, பலாகாரம் செய்து தருவது என நாள் முழுவதும் டீ வேலையில் பிஸியாக உள்ளார். 
அதுவும் டூவிலரில் சென்று கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்து வருகிறார். சுவை சுவை இவர் டீயில் மட்டும் என்ன விசேஷம் என்று பார்க்கிறீர்களா? 
இவர் போடுவது சாதா டீயோ, ஸ்பெஷல் டீயோ, காப்பியோ இல்லை. இவர் ஒரே டம்ளரில் குறைந்தது 5 வகையான சுவைகளை தருகிறார். 
அதாவது ஒரே டம்ளரில் டீ, காபி, பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ் என விதவிதமான சுவைகளை அடுக்கு அடுக்காக வைத்து தருகிறார். இவர் தனது 15 வயதில் டீ வேலைக்கு சென்றவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடையில் வேலை பார்த்து வந்தார்.
வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் விதவிதமான டீ போட முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது தான் இந்த லேயர் டீ-யை கண்டுபிடித்துள்ளார். முதலில் பால் தனியாகவும், டிக்காசன் தனியாகவும் இருக்கும் டீயை கற்று கொண்ட அவர் படிப்படியாக ஒரே டம்ளரில் டீ, பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ், பிளாக் காப்பி என தனித்தனியாக தருகிறார். கூட்டம் ஏராளம் கூட்டம் ஏராளம் இவரது டீயை சாப்பிட கோவையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். பல நாட்களாக டீ கடைகளில் வேலை செய்து வந்த இவர் தற்போது கணுவாய் அருகே சொந்தமாக டீ கடை வைத்து நடத்தி வருகிறார். 
 இவரது டீயின் சிறப்பு அம்சம் என்னவென்றால் டம்ளரிலுள்ளவைகள் ஒன்றோடு ஒன்று கலக்காது. நாம் குடிக்கும் பகுதி டீயாக இருந்தால், அதன்பின் காப்பி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் என இருக்கும். சுவைப்பவர்கள் இதனை உணரலாம். மாற்றி யோசி மாற்றி யோசி இவரது இந்த டீயின் விலை 15 ரூபாய் தான். இதுகுறித்து அவர் கூறும்போது, பல நாட்களாக டீ கடையில் வேலை செய்ததால் ஒரே மாதிரி டீ போடுவதற்கு பதிலாக மாற்றி போடலாம் என தோன்றியது. சொந்தமாக டீ கடை 
சொந்தமாக டீ கடை முயற்சி செய்து இந்த லேயர் டீயை கண்டுபிடித்தேன். தொடர்ந்து சொந்தமாக டீ கடை வைக்க வேண்டும் என பல நாட்களாக போராடி தற்போது தான் கடன் வாங்கி டீ கடை வைத்துள்ளேன் என்று கூறினார்.
l

கருத்துகள் இல்லை: