tamil.oneindia.com veerakumaran :
பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர், துணை முதல்வரை சந்திக்கிறார்- வீடியோ
சென்னை:
தமிழக அரசியலில் அடுத்த திருப்பமாக, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ்
சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக-பாஜக கூட்டணி ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. இன்று அமித்ஷா சென்னை வந்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த பொதுத் தேர்தலில், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இருந்தன.
இம்முறையும், அதே கூட்டணியை தக்க வைப்பதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதன் தலைவர்கள் முன் வைத்த நிபந்தனை என்பது, பாமகவும் நமது கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதுதானாம்.
பாஜகவிற்கு
இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதை பாஜக செவ்வனே செய்து
முடித்துள்ளதாம். எனவே இரு கட்சிகள் நடுவே நிலவும், இறுக்கத்தை தளர்த்த,
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன், பாமக நிறுவனர் ராமதாஸ்
இன்று சந்திப்பு நடத்த உள்ளாராம். அப்போது கூட்டணியை அவர் உறுதி செய்ய
உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவுடன்
பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியான நிலையில், பாஜக
தலைமை, அன்புமணி ராமதாஸ் மூலமாக பாஜக கூட்டணியிலேயே பாமகவை தக்க
வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக்,
நீட் உள்ளிட்ட விவகாரங்களில், தொடர்ச்சியாக அதிமுக அரசை கடுமையாக
குற்றம்சாட்டி வந்த ராமதாசுக்கு, அக்கட்சியோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு
இல்லை என்றும், இருப்பினும், இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதை
ஏற்றதாகவும் தெரிகிறது.
ராமதாஸ்
அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியானதால், பாமக, அதிமுக தொண்டர்கள் நடுவே
இணக்கமாக தேர்தல் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த
இறுக்கத்தை உடைக்கவே, அதிமுக தலைவர்களை ராமதாஸ் சந்திக்க உள்ளதாகவும்
கூறப்படுகிறது
அதிமுக-பாஜக கூட்டணி ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. இன்று அமித்ஷா சென்னை வந்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த பொதுத் தேர்தலில், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இருந்தன.
இம்முறையும், அதே கூட்டணியை தக்க வைப்பதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதன் தலைவர்கள் முன் வைத்த நிபந்தனை என்பது, பாமகவும் நமது கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதுதானாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக