தினமலர் :ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் தங்கியுள்ள
பாகிஸ்தானியர்கள், 48 மணி நேரத்தில் வெளியேறும்படி, அந்த மாவட்ட கலெக்டர்
உத்தரவிட்டுள்ளார்.<
ராஜஸ்தானில்,
பாக்., எல்லைக்கு அருகில் உள்ள பிகானிர் மாவட்டத்தில், வர்த்தகம், தொழில்
மற்றும் சிகிச்சைக்காக ஏராளமான பாகிஸ்தானியர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடந்த தாக்குதலையடுத்து, பிகானீர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை, 48 மணி நேரத்தில் வெளியேறும்படி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, கலெக்டர் குமார் பால் கவுதம், நேற்று பிறப்பித்த உத்தரவு: எல்லைக்கு அருகில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள், அடுத்த, 48 மணி நேரத்தில், மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். எல்லை பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தர்மசாலாக்கள் மற்றும் மருத்துவமனைகளில், பாகிஸ்தானியர்கள் தங்கவும் தடை விதிக்கப்படுகிறது.
இந்தியர்கள், பாகிஸ்தான் நாட்டவர்களுடன் வர்த்தக ரீதியான கொடுக்கல், வாங்கலில் ஈடுபடக்கூடாது. அவர்களை பணியமர்த்தவும் கூடாது. இந்த தடை உத்தரவு, இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டதற்கு பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக