புதன், 20 பிப்ரவரி, 2019

பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி பிரியா ராஜினாமா.. அதிமுகவுடன் கூட்டணி வைத்தமைக்கு எதிர்ப்பு..

பிந்திய செய்தி -Mahalaxmi : · அதிமுகவை விட்டு வெளியேறினார் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா.* ஈ.பி.எஸ். ஓ.பி.எஸை அம்மாவின் ஆத்மா மன்னிக்காது என்று ஆவேசம் 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மண்ணை கவ்வும் .... தனது அடுத்தக்கட்ட முடிவு குறித்து நாளை மறுநாள் அறிவிப்பு
admk alliance in lok sabha election 2019, pmk youth wing secretary rajeshwari priya resignstamil.samayam.com :அதிமுகவுடன் கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாமக இளைஞர் சங்க செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ராஜேஸ்வரி பிரியா ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி பிரியா ராஜினாமா செய்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அதிமுக,பாஜக,பாமக மெகா கூட்டணி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 40 இடங்களில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தினகரன் அணி எம்எல்ஏ.,க்கள் பதவி நீக்கம் காரணமாக காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது.


அண்மைக்காலமாக அதிமுகவையும் பாஜகவையும் பாமக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அதிமுக கூட்டணயில் பாமக இடம்பெற்றிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாமகவிலேயே உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. பாமகவில் இளைஞர் சங்க செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ராஜேஸ்வரி பிரியா, அதிமுக கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த இளைஞர் சங்க செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: