tamil.thehindu.com
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை நிற ரீதியாக
அம்மாநில ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையூறு செய்வதாகக் கூறி கடந்த 13-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் 6-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் திறந்த மன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் பேசி முடிவு செய்யலாம். நாள், நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று முதல்வர், அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சவால் விடுத்தார்.
இந்த சவாலை எற்றுக்கொள்வதாக நாராயணசாமி அறிவித்தார்.
இந்நிலையில் நாரயணசாமியின் தர்ணா போராட்டத்தை நிற ரீதியாக கிரண்பேடி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஊடகத்திலிருந்து ஒருவர் என்னிடம் தர்ணாவும் யோகாவா? என்ற ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்டார்... அதற்கு நான், ஆமாம்... அது நீங்கள் அமர்ந்திருக்கும் நோக்கத்தைச் சார்ந்தது. எந்தவிதமான ஆசனாவில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், எந்தவிதமான சத்தத்தை எழுப்பினீர்கள் என்பதைப் பொறுத்தது'' என்று கூறி இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கும் படத்தைப் பதிவிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கிரண்பேடியின் பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும்
எதிர்ப்புகள் கிளம்பின. கிரண்பேடி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நிற
ரீதியாக விமர்சித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் தங்கள்
கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்
நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையூறு செய்வதாகக் கூறி கடந்த 13-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் 6-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் திறந்த மன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் பேசி முடிவு செய்யலாம். நாள், நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று முதல்வர், அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சவால் விடுத்தார்.
இந்த சவாலை எற்றுக்கொள்வதாக நாராயணசாமி அறிவித்தார்.
இந்நிலையில் நாரயணசாமியின் தர்ணா போராட்டத்தை நிற ரீதியாக கிரண்பேடி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஊடகத்திலிருந்து ஒருவர் என்னிடம் தர்ணாவும் யோகாவா? என்ற ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்டார்... அதற்கு நான், ஆமாம்... அது நீங்கள் அமர்ந்திருக்கும் நோக்கத்தைச் சார்ந்தது. எந்தவிதமான ஆசனாவில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், எந்தவிதமான சத்தத்தை எழுப்பினீர்கள் என்பதைப் பொறுத்தது'' என்று கூறி இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கும் படத்தைப் பதிவிட்டு இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக