tamil.filmibeat.com - rajendra-prasath.:
சென்னை: நடிகை விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.
தமிழில் சில சீரியல்களிலும் நடித்த இவர்,
இயக்குநர் மற்றும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானுடன் காதல், திருமணம் எனப் பல பரபரப்பு புகார்களைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவரது அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜயலட்சுமியும் ஐசியுவில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சகோதரி கோரிக்கை
விஜயலட்சுமி
உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி
தெரிவித்துள்ளார். அதோடு, ‘இருந்த பணத்தை எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே
செலவு செய்துவிட்டோம், விஜயலட்சுமியின் சிகிச்சைக்காக சினிமா துறையினர் உதவ
வேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக