மாலைமலர் :திமுக கூட்டணி தொகுதி பங்கீடு
பேச்சுவார்த்தை முடிந்துள்ளதால் இன்னும் 1 வாரத்தில் தொகுதி எண்ணிக்கையை
மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகிறது. இரு கட்சிகளுமே கூட்ணி பேச்சு வார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இதில் ஒவ்வொரு கட்சியும் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் வழங்கி உள்ளது.
கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு வராத அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்ற விபரத்தை தெரிவித்து விட்டதாகவும், அதை இப்போது வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.
எனவே இன்னும் 1 வாரத்தில் ஒவ்வொரு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக