புதன், 20 பிப்ரவரி, 2019

CMக்காக பயிரை அழிப்பதா? விவசாயி தற்கொலை... சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் பேட் அவரது விவசாய நிலத்தில் ..மனமுடைந்து ..


Mahalaxmi : *ஆந்திராவில் முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.*
*குண்டூரின் கொண்டவீடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க முதல்வர் சந்திர பாபு நாயுடு சென்றார். இதற்காக அந்த கிராமத்தில் கோட்டேஸ்வர ராவ் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில், அவரது அனுமதி இன்றி, இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதிகாரிகள் இறங்குதளம் அமைத்ததால், அவர் பூச்சி மருந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. விவசாயி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ளன.

கருத்துகள் இல்லை: