திங்கள், 9 அக்டோபர், 2017

சென்னை ரெயிலில் கத்திகளோடு மாணவர்கள் அட்டகாசம் ..... சினிமா விதைத்த வன்முறை வெறி .. பச்சையப்பன் கல்லூரி ,,,


Mathi Oneindia Tamil சென்னை: சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயணித்த மாணவர்களால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஃபேஸ்புக் பக்கத்தில் "பச்சையப்பன் கல்லூரி பாரதிராஜா" என்ற ஐடியில் கடந்த 7-ந் தேதி 3 வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலில் மாணவர்கள் கும்பல் ஒன்று கத்தியை காட்டி பயணிகளை மிரட்டுகிறது. உச்சகட்டமாக ரயில் நிலையத்தில் பட்டாசுகளை வெடித்து பயணிகளை ஓடவிட்டனர். அதேபோல் ஓடும் பேருந்தில் டாப்பில் மாணவர்கள் ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த வீடியோக்களுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.<

கருத்துகள் இல்லை: