செவ்வாய், 10 அக்டோபர், 2017

எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

நக்கீரன் :பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதான தடா ரஹீமின் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாஜக நகரசெயலாளர் அஸ்வின்குமாரின் உறவினர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பு மற்றும் முஸ்லீம் அமைப்புகள்தான் காரணம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்து முஸ்லீம் மதத்தினரிடையே மோதல் உண்டாக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்ட ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தினர் சட்டத்துக்குட்பட்டு விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். - சி.ஜீவாபாரதி

கருத்துகள் இல்லை: