Damodaran : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு -- ஒரு அநீதி அக்கிரமம். தமிழ் நாட்டில் பாதி பேருக்கு மேல் வேலை இன்றி திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சாப்பாட்டுக்கும் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் வாடுகிறார்கள்
விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நெசவாளர்கள் நாளும் அரைப்பட்டினி , ஏழை நடுத்தர குடும்பங்கள் பற்றாக்குறையால் நரகவேதனை அனுபவிக்கும் இந்த காலகட்டத்தில் .... எம்.எல்.ஏ./எம்.பி.க்களுக்கு மந்திரிகளுக்கு ஊழலுக்கு உதவி செய்யும் அரசு உயர் அதிகாரிகளுக்கு
மாதம் ஒன்றுக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் .....
இது ஒரு பெரிய பகல் கொள்ளை அல்லவா ?
ஆசிரியர் அரசு ஊழிழர்களுக்கு
அளவுக்கு அதிகமான சம்பளம் படிகள் வழங்குவது
அநீதி, மனிதாபிமானமற்ற ,இரக்கமற்ற செயல்.
இதுவும் போதாது இன்னமும் பல மடங்கு ஊதியம் கேட்டு நடத்தும் போராட்டங்கள் நியாயமா ?
இவர்களின் சம்பளத்துக்கு ஒரு உச்ச வரம்பே இல்லையா ?
ஒரு ஊழியருக்கு மாத அடிப்படை சம்பளம் ரூ 13000 / இன்னொருத்தருக்கு 225000 /என்பது
எந்த வகை சமூக நீதி ?
ஏழை எளிய மக்களை ஜி.எஸ்.டி வெறியால் கொன்றுகுவிக்கிற 'அரசு'
அரசு ஊழியர்களுக்கு ஊதாரி செலவுகளுக்கு ஊட்ட சத்து ஊட்டிக்கோண்டு இருக்கிறது. இது நியாயமா ?
எல்லோருக்கு அரிசிவிலை பருப்பு எண்ணெய் விலை ஒன்றுதானே
சம்பள கமிஷன் பரிந்துரை முதலாளித்துவத்தை பறைசாற்றுகிறது.
ஊதிய உயர்வு தேவை அற்றது அநியாயம்.
இதுவும் போதாதென்று தங்கள் கடமையை செய்ய
ஆயிரத்தில் லட்சத்தில் லஞ்சம் கேட்டுவாங்கும் அரசு ஊழியர்கள்.
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..லஞ்சம் வாங்காத அரசு ஊழியர் யாராவது உண்டா ?
ஊழலை வளர்க்கவும் கொள்ளை அடிக்கவும்
அரசு அதிகாரிகள் / அரசு ஊழியர்கள் என்ற பேராசைக்காரர்கள்அரக்கர்கள்.
ஆட்சியாளர்கள் அரசு ஊழியர்கள் சம்பளம் படிகள் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை எதிர்த்து...
மக்கள் போராடவேண்டும்
அனைத்து எதிர் கட்சிகளும் அரசியல் லாபத்துக்காக
இந்த சம்பள உயர்வை ஆதரிக்க கூடாது
***************************************************************************
மக்களே! அரசியல் காட்சிகளே !
அரசு ஊழியர்களின் உல்லாச வாழ்க்கைக்கு துணை போகாமல் ..
மனிதாபிமானத்தோடு வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடும் அப்பாவி மக்களுக்காக பலத்த குரல் கொடுங்கள் ,போராடுங்கள்.
***************************************************************************
சம்பள உயர்வு கேட்டு போராடும் அரசு ஊழியர்கள் போராட்டங்களை எதிர்த்து
மக்கள் போராட்டம் வெடிக்கட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக