செவ்வாய், 10 அக்டோபர், 2017

டெங்கு மரணங்களும் ஹீலர்களின் உல்டா பிரசாரங்களும்.. எய்ட்ஸ் உடபட All நோய்கள் .. ... ???


R.S.Prabhu: தமிழகத்தில் தினமும் பத்துக்கும் குறையாத டெங்கு மரணங்கள் கொள்ளைநோய் கணக்காக நிகழ்ந்து கொண்டிருக்கையில் தடுப்பூசி போட்டதால் மரணம் நிகழ்கிறது, கொசு மருந்து தெளிப்பதால் கொசுக்கள் பெருகிறது, மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் கொசுக்களைக் கொல்லக்கூடாது, அலோபதி மருத்துவத்தில் டெங்குவுக்கு மருந்தில்லை என்றெல்லாம் பேசிவரும் ஹீலர் கும்பல்கள், மரபு/பாரம்பரிய ஆர்வலர்கள்தான் இன்றைய merchants of death. பப்பாளி இலைச்சாறு பருகினால், நிலவேம்பு கசாயம் பருகினால் டெங்கு குணமாகும் என்று நம்பி மருத்துவர்களிடம் போகாமல் குடும்பத்தினரின் உயிரைக் கொன்று கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு இந்த ஹீலர்கள் கடவுளாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.
பஞ்சகவ்யம் குடித்தால் எய்ட்ஸ் உட்பட எல்லா நோயும் குணமாகும், கண்ணாடி போட தேவையிருக்காது, காசுக்கு ஆசைப்பட்டு அலோபதி மருத்துவர்கள் சிசேரியன் செய்துவிடுகிறார்கள், நாற்காலியில் உட்கார்ந்ததால்தான் வியாதிகள் வருகிறது, கலப்பின விதைகள் என்றால் மறுபடியும் முளைக்காது என சகட்டுமேனிக்கு பொய்களைப் பரப்பிய நம்மாழ்வார்தான் இந்த ஹீலர் கும்பல்களின் பிதாமகன்.

அவரது வழித்தோன்றல்தான் நாட்டிலே குழந்தைகள் புரதச்சத்து பற்றாக்குறையால், நோய்களால் செத்தாலும் பசுக்களுக்கு புணர்வதற்கு காளைகள் இல்லையென்றும், கொசுக்கள் புணர்வதைத் தடுக்கக்கூடாது என்றும் பேசிவரும் செந்தமிழன் போன்றவர்கள்.
வேளாண்மை மீதான மிகப்பெரிய பொய், புரட்டுகளை நம்மாழ்வார் போன்றவர்களை வைத்து பரப்பியது பிரபல விவசாய மஞ்சள் பத்திரிகையான பசுமை விகடன் என்றால், தடுப்பூசி, டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றில் தவறான கருத்துக்களைப் பரப்பி ஒவ்வொரு இழவு வீட்டிலும் பிணத்தின் மீது சர்க்குலேஷன் எண்ணிக்கையை கணக்கிடுவது ஆனந்த விகடன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மரபு, பாரம்பரியம் என்பதெல்லாம் எந்த அளவுக்கு அனுமதிக்க வேண்டும், எந்த இடத்தில் No சொல்லவேண்டும் என்ற புரிதல் இல்லாமல் எல்லாவற்றையும் சர்வதேச சதி, பன்னாட்டு வியாபாரம் என்று பார்ப்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்கமுடியாது. தென்னைமட்டையில் கூரை வேய்ந்த வீடுகள் பார்க்க அற்புதமாக இருக்கும். கும்பகோணம் பள்ளியில்கூட அப்படித்தான் இருந்தது. அந்த பச்சைக்குழந்தைகள் தீயிலே கருகியபோது எப்படி துடித்திருக்கும்? நம் குழந்தைகளை அப்படி ஒரு இடத்தில் மரபு என்றபெயரில் அனுமதிப்போமா? பிறந்தவன் எல்லாம் சாகத்தனே போகிறான் என வியாக்கியானம் பேசி மரபு, பாராம்பரியம் சார்ந்த இடம் என்று எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ஓர் இடத்துக்கு நம் குழந்தைகளை அனுப்புவோமா? ஆனால் இந்த பாரம்பரிய ஆர்வலர் கோஷ்டிகள் அடுத்தவன் வீட்டில் இழவு விழ வேண்டும் என்றுதான் கங்கணம் கட்டித் திரிகிறார்கள்.
இன்று நிகழும் டெங்கு மரணங்களைப் போல - மக்கள் உணவுக்காகவும் பாலுக்காகவும் சாலைகளில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த ஹீலர்கள், மரபு ஆர்வலர்கள் பிணந்தின்னிக் கழுகுகளாக அலைகிறார்கள்.

கருத்துகள் இல்லை: