வியாழன், 12 அக்டோபர், 2017

சரத்குமாரிடம் கைப்பற்றிய 9 லட்சம்.. திருப்பி புதிய நோட்டு கொடுக்க மறுக்கும் வருமானவரி துறை

Vijay Bhaskarvijay : சமத்துவக் கட்சித் தலைவருக்கு
( என்ன சமத்துவம் என்றுதான் தெரியவில்லை )
வந்த விநோதமான பிரச்சனை என்று ஒரு செய்தியை தினத்தந்தி DT NEXT யில் படித்தேன்.
தேர்தல் சமயத்தில் அவரிடம் இருந்து 9 லட்ச ரூபாயை அரசாங்கம்(?) கணக்கில்லாத பணம் என்று எடுத்துக் கொண்டு விட்டது.
இல்லை கணக்கிருக்கிறது என்று நிருபித்து பணத்தை வாங்குவதற்கு முன் புதிய ருபாய் திட்டத்தை அறிவித்து விடுகிறார்கள்.
கேஸில் ஜெயித்து பணத்தை வாங்கும் போது “ இந்தாங்க உங்க பணம்” என்று சரத்குமாரிடம் நீட்டும் போது
“அப்போது என் பணம் செல்லம். இப்போது இது செல்லுமா” என்று கேட்டு, செக்காகவோ டிடியாகவோ அல்லது அக்கவுண்டில் டெப்பாஸிட் செய்யவும் என்று கேட்டிருக்கிறார்.
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ரைடில் எடுத்துப் போன பணத்தை கொடுத்து விட்டோம் என்று எடுத்தவர்கள் சொல்ல சரத்குமார் கோர்ட்டுக்கு போகிறார்.

அங்கே கோர்ட் என்ன சொல்கிறது “புதிய ரூபாய் திட்டம் அடிப்படையில் என்ன கேஸ் கொடுத்தாலும் அதை கணக்கில் எடுக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது.
ஆகையால் கேஸ் செல்லாது “ என்று சொல்ல,
மறுபடியும் “ஐயா இது பிரச்சனையே வேற” என்று இன்னொரு கேஸ் அல்லது மேல் முறையீடு ஏதோ ஒண்ணு செய்திருக்கிறார் சரத்குமார்.
இப்போது கேஸின் தன்மையை புரிந்து கொண்ட நீதிமன்றத்தினர்
“ஆம் நீங்கள் சொல்வதிலும் பாயிண்ட் இருக்கிறது. நீங்க என்ன பண்ணுங்க. இதை உயர்நீதிமன்றத்துகோ உச்சநீதிமன்றதுக்கோ கொண்டு செல்லுங்கள். அவர்களால் இதற்கு உதவ முடியும்” என்று சொல்லி இருக்கிறார்களாம்.
அதுவரைக்கும்தான் செய்தி கொடுத்திருக்கிறார்கள்.
கேஸ் என்ன ஆகுமோ தெரியவில்லை.
புதிய ரூபாய் திட்டம் யார் யார் வாழ்க்கையில் எல்லாமோ எப்படி எப்படி எல்லாமோ விளையாடியிருக்கிறது. கஷ்டப்படுத்தி விட்டது.
நன்மையை கொடுக்காமல் விளையாடி விட்டது பாருங்கள். அதுதான் கடி.
சரி இருக்கட்டும் சக நடிகர் சரத்குமாரின் பணத்தை சோலி முடித்த புதிய ரூபாய் திட்டத்தை
இனியாவது கமல் போன்ற சக நடிகர் கண்டிப்பாரா என்பதுதான் கேள்வி

கருத்துகள் இல்லை: