வியாழன், 12 அக்டோபர், 2017

மெர்சல் மட்டுமல்ல.. பொய் வசூல் கணக்குகள் .. பொய்யான பில்ட் அப்புகள் .

southindianvoice.com :  ஒவொரு படம் ரிலீசாகும்போதும் பில்டப் ராஜாக்களான விஜயும்,அஜித் ம் முந்தைய ரஜினி படத்த தாண்டிடுச்சு,தாவிடுச்சினு கோழி கூவுறமாதிரி  கூவி,கூவி பத்திரிக்கைகள்(ஒன்லி மணி நோ ரியல்)    மூலமா  100குரோர்கிளப்ல ஜாய்ன் பன்னிடுச்சுனு புளுகு மூடையா அவிழ்த்து விடுவாங்க
அலாஸ்கா,அண்டார்டிகானு கவுண்டமணி  என்ன மாப்ள கொஞ்சம் கூட  கூச்சபடாம சொல்றனு கேக்குறமாதிரி உலகப்பொய்யன் கோயாபல்ஸே வெட்கப்படும் அளவு பொய் புளுகர்ள் புளுகித்தள்ளுவாங்க
ஆனா சிவகார்த்திகேயன்கிட்ட சுவற்றில் அடிபட்டு ஒட்டிக்கொண்ட பல்லி மாதிரி வாங்கு வாங்க. ஆனா ஓப்ப்னிங்கிங்னு 10 வருஷமா பத்திரிக்கைகளில் பில்டப் கொடுக்கப்படுப‌வரும்,வசூல் வெல்லவர்த்தி (சக்ரவர்த்தியெல்லாம் கிடையாது)  என்று  வெட்டிகதை பேசுபவர்களும் இன்னும் சூர்யாவின் பிஸினஸையே தாண்டவில்லை என்பதே களநிலவரம்.

ஆனா படம் வரும்போது பத்திரிக்கைகளில் 100கோடிபட்ஜெட்,(100 குரோர்னு கிளப்புகுள்ள நுழைந்ச உடனே பட்ஜெட் போட்ருவாங்கபோல)னு சொல்லிட்டு இப்ப வியாபாரம் 100 கோடிய தொட்டுடுச்சினு செய்திய போடுறாங்க ஏம்ப்பா 100 கோடி கிளப்புல சாதாரணமா சம்மர் சால்ட் அடிச்சி நுழையுறவுங்க ஏம்ப்பா 100 கோடி வியாபரம்னு சொல்றீங்க என்ன செய்யுறது ஏதாவது தமிழன்,தல மாஸ் ஓப்பனிங்,வசூல் வெல்லவர்த்தி,100 கோடி வியாபாரம்,படத்துக்குதடை,


ரஜினிய தாண்டி ரஷ்யாவுக்கு போய்ட்டோம் எம் ஜி ஆர்-சிவாஜி ரஜினி-கமல் வரிசையில பாய்போட்டு படுத்துகிட்டோம்னு பணத்த பத்திரிக்கை நிருபர்களுக்கு லஞ்சம் கொடுத்து(கவர்தான்) பொய்ய,புளுக நம்பவெச்சி அத படிக்கிற இளைஞர்களை தம் பக்கம் திருப்பி அரசியல்வாதிகளைவிட அதிக அரசியல் செய்து  முதலமைச்சர்கனவில்   தினமும் உறங்கும்  அஜித்,விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பொய்மூட்டை அவிழ்ப்பதை நிறுத்தவேண்டும்

சினிமாவுல நடிக்கிறதோடு  விடுங்க இல்லைனா உங்களின் ஆரம்பகால சினிமாவின் படுதோல்வியிலிருந்து சமீபகால சின்ன நடிகர்களிடம் மரண அடிவாங்கி  பீல்ட் அவுட் ஆகி இருக்கும் ஆதாரசெய்திகளை வெளியிடும் சூழல் வரும் என எச்சரிக்கப்படுகிறது

(எடுத்துக்காட்டு சாம்பிள்  ஈகா தியேட்டரில்  பெஸ்டிவல் டே வில் வெளியான  பைரவா முதல் ஷோவில் 86 பேர் படம் பார்த்த்தும்,பெஸ்டிவல் டேவில் வெளியான விவேகம் உட்லண்ட்ஸில்  முதல் நாள் ரிசர்வேஷ்னில் 2 டிகெட் விற்பனையான சாதனை முதல் 100 கணக்கான  அட்டர் ப்ளாப்சாதனைகள் வெளியிடப்படும்)

கருத்துகள் இல்லை: