ஞாயிறு, 8 அக்டோபர், 2017

திருக்குறளை மக்கள் சொத்தாக்கியது #திராவிடர்இயக்கமே!


#திருக்குறள் .. #திராவிடர்இயக்கம்
இன்று நமக்கு திருவள்ளுவர் என்றால்
நன்றாகத் தெரிகிறது.
திருக்குறள் என்றால் என்னவென்று ஆரம்பக் கல்வி கற்றவருக்கு கூடத் தெரியும்.
திருக்குறள் அனைத்தையும் அர்த்தத்துடன் அறியாத ஒருவர்கூட திருக்குறள் உயர்வானது என்பதை அறிந்திருக்கிறார்.
தங்கள் எழுத்திலும், பேச்சிலும் திருக்குறளை மேற்கோள் காட்டாதவர்கள் எவருமில்லை.
பல நூற்றுக்கணக்கானவர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.
திருவள்ளுவரையும், திருக்குறளையும் தற்போதைய அரசுகள் ஆவணங்களில் பயன்படுத்துகின்றன.
இவையனைத்தும், நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கத்தின் அளப்பரிய சாதணை!
இல்லையென மறுப்போர் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடைகூறட்டும்....
திருக்குறளின் உண்மையான பெயரென்ன?
திருவள்ளுவரின் உண்மைப் பெயரென்ன?
திருக்குறள் எழுதப்பட்ட காலமென்ன?
இந்த மூன்று கேள்விகளுக்கும் நம்மிடத்தில் தோராயமான பதில்தான் உள்ளதே தவிர உறுதியான பதிலில்லை.
சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்குள் நமது வரலாறு இவ்வளவு தடுமாற வேண்டிய காரணம் என்ன?

தடம் மாற்றியவர் யார்?
திருக்குறள் எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எந்த குறுநிலமன்னன்,
பெருநிலமன்னன், பேரரசன்
குறள்நெறி நின்று ஆட்சி செய்தான்?
மனுநெறி போற்றி ஆட்சி செய்தவர்களை
குறள்நெறி போற்றாமல் தடுத்தது எது?
இந்த ஈராயிரம் ஆண்டு வரலாற்றில் இன்று இருப்பது போல...
திருக்குறள் செல்வர்,
திருக்குறள் மாமணி,
குறள்நெறிச் செம்மல்,
வள்ளுவர் வாரிசு,
திருக்குறளார்,
என்ற பெயர் கொண்ட திருக்குறள் பரப்புதலை தமது வாழ்நாள்த் தொண்டாக செய்து வந்த பழந்தமிழ்புலவர்கள் யார்? செய்யாமைக்கு காரணமென்ன? செய்வதற்கு தடையென்ன?
இந்த ஒரு நூற்றாண்டில் பலநூறு திருக்குறள் உரைகள் வெளிவந்திருக்க...
இத்தனை நூற்றாண்டுகளாக திருக்குறளுக்கு உரையெழுதிய புலவர்கள் எண்ணிக்கை எத்தனை?
எந்த மன்னனின் ஆட்சி காலத்திலாவது மக்களின் வாழ்வியல் நூலாக திருக்குறள் இருந்திருக்கிறதா?
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற
திருக்குறள் நெறி தமிழ் மக்களால், தமிழ் மன்னர்களால் எப்போதாவது பின்பற்றப்பட்டதுண்டா?
எந்த தமிழ் மன்னனின் ஆட்சியிலாவது பாடசாலைகளில், கல்வி நிலையங்களில் திருக்குறள் கற்பிக்கப்பட்டதாக சான்றுகள் உண்டா?
இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் வெள்ளையர்களுக்கு முன்பு வரையில் திருக்குறள் போன்ற உயர்வான நூலை தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்த்த தமிழறிஞர் யார்?
வடமொழி இராமயணத்தை தமிழில் மொழிபெயர்க்கத் தெரிந்த கம்பனுக்கு திருக்குறளை வடமொழியில் மொழிபெயர்க்க தெரியாதது ஏன்?
திருக்குறள் நிகழ்வுகள்,
திருக்குறள் சொற்பொழிவுகள்,
திருக்குறள் வகுப்புகள்,
திருக்குறள் விரிவுரைகள்,
திருக்குறள் விவாதங்கள்,
திருக்குறள் இசையரங்குகள்
திருக்குறள் கதைகள்,
திருக்குறள் போட்டிகள் ஆகியவற்றை நடத்தி பரிசளிக்கும் முறை எந்த தமிழ் அரசர்களின்
அரண்மனையிலாவது, எந்த தமிழ் புலவர்கள் சங்கத்திலாவது இருந்துள்ளதா?
இதில் ஏதாவது ஒன்று திராவிடர் இயக்கத்திற்கு முன்புவரை இந்த மண்ணில் நடந்ததுண்டா?
எனவேதான்....
நெஞ்சு நிமிர்த்தி... !!!
குரல் உயர்த்தி முழங்குகிறோம்...!!!
திருக்குறளை மக்கள் சொத்தாக்கியது
#திராவிடர்இயக்கமே!
பதிவர் தோழர் Viduthalaiarasu  தோழர் விடுதலை அரசின் முகநூல் பதிவு.
சிறந்த கருத்துக்கள்.
சிந்திக்கவேண்டிய கேள்விகள்!

கருத்துகள் இல்லை: