திங்கள், 4 செப்டம்பர், 2017

எடப்பாடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் டிடிவி ஆதரவு 8 எம்எல்ஏக்கள் ......?

சென்னை:  புதுச்சேரியில் முகாமிட்டுள்ள  தினகரன்ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்தன. இது டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தினகரனுக்கு 21 எம்எல்ஏக்கள் நேரடியாக ஆதரவை தெரிவித்தனர். இவர்களில் 19 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான தங்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவர்கள் அனைவரையும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தார். கடந்த 2 வாரமாக சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கி இருப்பதால் அவர்களால் தொகுதிக்கு செல்ல முடியவில்லை.


இதனால் தொகுதி மக்கள் எம்எல்ஏ க்களின் செல்போன் எண்களுடன் அவர்களை காணவில்லை என சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்களை பரப்பி வந்தனர். மக்களின் குறைகளை கேட்காமல் அவர்கள் சொகுசாக தங்கி இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டு வந்தது. இந்நிலையில் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. ஏற்கனவே, முதல்வர் எடப்பாடி தலைமையிலான எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்த போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அப்போதே எங்களை ஏன் கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களின் கூட்டம் நடக்கிறது. கடந்த முறை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரது தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 75 வரையிலான எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அதிமுகவில் சில எம்எல்ஏ க்கள் எந்த அணி பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் இருப்பதாலும் கூட்டத்தை புறக்கணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் சுமுகமாக போவது குறித்து அவர்களுடன் எடப்பாடி அணியினர் பேசி வந்ததாக தகவல்கள் கசிந்தன. பலமுறை பல்வேறு கோரிக்கைகளுடன் தினகரனிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 2 வாரமாக புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் சுமார் 8க்கும் மேற்பட்ட எம்எல்ஏ க்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எனவே,  நாளை நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

டிடிவி.தினகரன் சசிகலாவுடன் சந்திப்பு?
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி.தினகரன் இன்று செல்வார் என்று தகவல்கள் கூறுகின்றன. 12ம் தேதி நடக்கும் செயற்குழு கூட்டம் குறித்து கடந்த முறை சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய தினகரன் பொதுக்குழுவில் சசிகலாவை நீக்கினால் ஆதரவு எம்எல்ஏக்களை கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் பேச இருக்கிறார். தினகரன்

கருத்துகள் இல்லை: