ஞாயிறு, 18 ஜூன், 2017

மலேசியா இளைஞர்மீது பாலியல் வன்முறை கொலை ...

மலேசியத் தமிழ் இளைஞர் நவீன் கொலைமலேசியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வெறுப்பின் விதைகள் எங்கு விதைக்கப்பட்டாலும் அது மானுட மரத்தைப் பட்டுப்போக வைத்துவிடுகிறது.
பினாங்கு நகரைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகன் நவீன். கடந்த 10 ஆம் தேதி இவர் தன் நண்பர் பிரவீன் என்பவருடன் பேக்கரியில் பர்கர் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஐந்து இளைஞர்கள் நவீன், பிரவீனுடன் தகராறில் ஈடுபட்டனர். ஐந்து பேர்கொண்ட கும்பல் அவர்களைக் கடுமையாகத் தாக்கியது. பிரவீனுக்கு கண் பகுதியில் பலத்த அடிபட்டது. ஆனாலும் எப்படியோ தப்பி ஓடிவிட்டார். ஆனால், நவீனைப் பிடித்து அடித்த அந்தக் கும்பல், அவரை வேறு இடத்துக்குக் கொண்டு சென்று தவறான பாலுறவில் ஈடுபட்டது.
மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நவீன், பினாங்கு நகரத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நவீன் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அவர் முன்னர் படித்த பள்ளியில் உடன்படித்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. நவீன் மிகச்சிறந்த இசைக்கலைஞர். ஏ.ஆர்.ரஹ்மான்போல் வரவேண்டும் என்பதே அவரது லட்சியம். நவீன் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய செய்தியைப் பார்த்த  ஏ.ஆர்.ரஹ்மான், `நவீன் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்' என ட்வீட் செய்திருந்தார்.

தமிழ் இளைஞல் நவீனின் தாயார் சாந்திநிர்பயாவைக் காப்பற்ற முயற்சி எடுத்ததுபோலவே, நவீனையும் காப்பாற்ற மருத்துவர்கள் நான்கு நாள்களாக முயன்றனர். ஆனால்,  சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வியாழக்கிழமை நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு நடந்த கொடூரம் குறித்து அறிந்த மலேசிய தமிழ் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
நவீன் இறந்த தகவல் கேள்விப்பட்டதும், மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சோகத்துடனும் வேதனையுடனும் கூடியிருந்தனர். சொல்ல முடியாத துயரத்துடன் காணப்பட்டார் நவீனின் தாயார் சாந்தி. இவரின் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், நவீனையும் பறிகொடுத்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக அவர் கதறியது காண்போரைக் கரைத்தது. நேற்று நவீனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட மலேசிய சமூகநலத் துறை அமைச்சர் ரஹானி அப்துல் கரீம், ``ஒரு தாய் என்ற முறையில் இந்த மரணத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நவீனின் மரணத்துக்குக் காரணமானவர்களை, சிறார் குற்றவாளிகளாகக் கருதி வழக்குப்பதிவு செய்யக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளேன். இன்னொரு முறை இந்த நாட்டில் இதுபோன்ற சம்பவம் நிகழக் கூடாது'' என வேதனை தெரிவித்துள்ளார்.
நவீன் கொலையில் தொடர்புடைய ஐந்து பேரை, மலேசிய போலீஸார் கைதுசெய்துள்ளனர். அனைவரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன், உயிர் பிழைத்துக்கொண்டார். அவரின் தலைப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இசையால் உயர நினைத்த இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை, நம்மைக் கலங்கவைக்கிறது. விகடன்

கருத்துகள் இல்லை: