ஞாயிறு, 18 ஜூன், 2017

திருமாவளவன் வியூகம் : ரஜினியை ஆதரிக்கிறாரா? ஈழத்தமிழருக்காக போராடுவோர் தருமபுரி கொடுமைகளுக்காக ஏன்...?


meena.somu.   நியூஸ் 7 சேனல்  தோழர் திருமாவளவன் பேட்டி.:
அவரு எங்க ரஜினிக்கு ஆதரவா பேசினாருன்னு எல்லாரும் தம் கட்டுறீங்க மக்களே?  ஒரு பார்ப்பன பத்திரிக்கை சாரிஸ்மாட்டிக் லீடர்க்கு விளக்கம் கேட்டுட்டு, வெளியில் திருமா சொல்லாத ஒன்றை திரித்து அட்டைபடத்தில் போட்டு அதோட தாகத்தை தனித்துக் கொண்டது பத்திரிக்கை தர்மமல்ல. ஆனால் இப்படியில்லாத விசயத்தை "நடிகை காதலில் தத்தளித்தார்" என அட்டைபடத்தில் போட்டுட்டு உள்ளே அந்த நடிகை நடித்த படத்தின் காதல் காட்சியை விவரிக்கும் நம் பத்திரிக்கைகளின் மசாலா விளம்பர யுக்தி நமக்கு பழகியது தானே. > ஆனால் ரஜினிக்கு வால் பிடிப்பதாக திமுக ஆதரவு பதிவர்களும் டம்ளர்ஸ்ஸும் வடித்த நீலிக் கண்ணீர் இருக்கே. அடேங்கப்பா நீங்கல்லாம் திருமாவ இவ்வளவு தூரம் மதிச்சீங்களா ?! எங்கப்பா இருந்தீங்க இத்தனை நாளா ? வாய்ப்பு கிடைச்சுதுன்னு மிதிக்க ஓடிவந்த உங்க வேகத்தில் தெரிவது திருமா போன்ற தலைமையில்லாத உங்க கட்சிகளின் பொறாமை உணர்வும் ஜாதி வன்மமும் தான். திருமாவளவன் அவர்களது பேட்டி தெளிவான பேட்டி. பாவம் பேட்டி எடுத்தவர் தான் புரியாத மாதிரி புரிந்த விசயத்தை குழப்பி குழப்பி கேள்வி கேட்டுட்டு இருந்தாரு. அவருக்கு கொடுக்கப்பட்ட அஸைன்மெண்ட் அப்படி. பேட்டி முழுக்க திருமாவளவன் அவர்கள் நிதானமாக அரசியல் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாரு.
தமிழகத்தின் கேடுகெட்ட அரசியல், சாரிஸ்மாட்டிக்( வசீகர) தலைவர் என்ற பெயரில் சினிமா பின்புலம் கொண்டவர்களை தேர்வு செய்வதும் எவ்வளவு சிறந்த மக்கள் நலம் விரும்பும் தலைவர்களையும் புறம்தள்ளும் ஜனநாயக போக்கு குறித்தும் சுயவிமர்சனத்தோடு தெளிவாக இருந்தது அவரது பேச்சு.
அதைவிட டம்ளர் பாய்ஸ்... உங்களுக்கு புரிந்திருக்காது, தமிழ் தேசியம் குறித்த அவரது பேச்சு.
இருந்தாலும் சொல்கிறேன்...
தமிழ் தேசியம் என்பது இந்துமத இந்துதேசியத்துக்கு எதிரானது. தமிழ் தேசியம் என்பது ஜாதியற்ற சமூகம் என்ற விளக்கத்தை கொடுத்து, ஜாதிய சக்திகளோடு கை கோர்க்கும் உங்க கேவலமான தமிழ் தேசிய பார்வையை அம்பலப்படுத்திய வரிகளுக்காக... தோழர் திருமாவளவனுக்கு பாராட்டுகளும் அன்பும்.
அவரது பேச்சில் உங்க மண்டையில் கொட்டும் வரிகள்....
//ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்தபோதும் அக்கொடுமைகளுக்கும் உன்னால் போராட முடிகிறது. ஆனால் தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் குடிசைகளை தீக்கிரையாக்கிய போது போராடும் துணிச்சல் ஏன் இந்த தமிழ் தேசியவாதிகளுக்கு இல்லை? அப்படியென்றால் யாருக்கு அச்சப்படுகிறீர்கள் ? அவர்கள் தமிழர்கள் இல்லையா ?
அப்ப எது தமிழ்தேசியம் ? சேரியை கொளுத்தினால் மனம் பதற மாட்டேங்குது. வெண்மணியில் 44பேர், விழுப்புரத்தில் 12பேர்,
தர்மபுரியில் மட்டுமல்ல ஜாதி வன்மத்தால் எத்தனை கொலைகள் நடக்கின்றன கீழ்வெண்மணி, மேலவளவு, விழுப்புரம், ......
தமிழ் தேசியம் என்றால் என்ன ? வெறும் இன உணர்வும் மொழி உணர்வுமா தமிழ்தேசியம் ?
தமிழ் தேசியத்தை வெறும் மொழி உணர்வாகவும் இன உணர்வாகவும் பார்க்கிறார்கள். அது வெறும் மொழி, இன உணர்வு அல்ல. தமிழ்மக்களின் நலன்கள், தமிழ்நாட்டின் நலன்கள், மாநில உரிமைகள் என எல்லாம் சேர்ந்தது தான் தமிழ் தேசியம். எல்லா தமிழர்களுக்கும் ஒன்றுபட்ட தேசியம் எனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி சேரி ஏன் இருக்கனும் ? எல்லா தமிழர்களும் ஒன்னா குடியிருக்க வேண்டியது தானே ? அதுக்காக யாரு போராடியிருக்கா ? அதை பற்றி நாம என்னைக்கு கவலைப்பட்டு இருக்கோம் என்று பேசி இருக்கோம் ? தருமபுரியில் மூன்று கிராமங்களை பட்டப்பகலில் ஆறு மணி நேரம் தீயில் கொளுத்தினார்களே, அவர்கள் என்ன கன்னடர்களா ? தீக்கிரையானவர்களெல்லாம் என்ன தெலுங்கர்களா, கன்னடர்களா ? தமிழன் தானே போய் அடித்தான், கொளுத்தினான்? ஒரு தமிழ் தேசியவாதி கூட அம்மக்களை போய் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லை, கண்டனம் தெரிவிக்கவில்லை. போலித் தமிழ் தேசியமது.
தமிழ்தேசியம் என்பது ஜாதி வரம்பை தாண்டி நிக்கனும், மொழி, இன உணர்வுகளை தாண்டி அரசியல் ரீதியான கோட்பாடாக இருக்கனும்.
நான் ஜாதிய அப்படியே தான் வைத்துக் கொள்வேன், ஊர கொளுத்துவேன், உன்னை அடிப்பேன், பட்டப்பகலில் அடிச்சு கொலை செய்வேன், தமிழன் தலையை வெட்டி துண்டாடுவேன். ஆனால் தமிழ் தேசியம் பேசுவேன் என்பது எப்படி தமிழ் தேசியமாக இருக்க முடியும் ?
விடுதலை சிறுத்தைகள் முன் வைக்கும் தமிழ் தேசியம் என்பது ஜாதி ஒழிப்புடன் கூடிய தமிழ் தேசியம். ஜாதி ஒழிப்பு என்பதை முதன்மை படுத்தனும். ஜாதியற்ற தமிழர்களா ஒவ்வொருவரும் தலைநிமிர்ந்து நிக்கனும். ஜாதிய மறந்து தமிழர்களா கை கோர்க்கனும்.//
ஐ சல்யூட் யூ தோழர் திருமாவளவன். இந்த துணிச்சல் இங்கிருக்கும் எந்த ஒடுக்கப்பட்ட தலைமைகளுக்கே இல்லாத நிலையில்...
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகத்திற்கும் ஜனநாயகத்திற்காகவும் பெரியார், அண்ணல் அம்பேத்கரின் வழியில் நின்று அதுவும் அரசியலில் தெளிவான பார்வையோடு, சக அரசியல்வாதிகளுக்கும் அரசியல் பார்வையை தெளிவுபடுத்தும் உங்கள் துணிவிற்கு பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை: