செவ்வாய், 2 மே, 2017

திருமாவளவன் : தினகரனிடம் லஞ்சம் வாங்க இருந்த அதிகாரி யார்?

தினகரனிடம் லஞ்சம் வாங்க இருந்த தேர்தல் அதிகாரி யார் என்பது பற்றி சிபிஐ விசாரணை வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதுரையில் செவ்வாய்க்கிழமை மே 2ஆம் தேதி (இன்று)செய்தியாளர்களைச் சந்திக்கையில், மாநில சுயாட்சி என்பது அனைத்து மாநிலங்களின் உரிமையாகும். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தற்போது தமிழக அரசு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியில் உள்ளது. அதிமுக-வின் இரு அணிகளை உருவாக்கிய பாஜக தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. தமிழக அரசு சுதந்திரமாகச் செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். கொடநாடு காவலாளி கொலை பல்வேறு மாற்றங்களையும், சந்தேகங்களையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. இதுபற்றி சிபிஐ விசாரணை வேண்டும்.

தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்றால் அது தமிழகம் வரை தான் பாதிக்கப்படும். ஆனால் தேர்தல் ஆணையம் ஊழல்மயமாகியுள்ளது என்றால் இந்தியாவுக்கே பெரும் பாதிப்பு. தினகரன் லஞ்சம் கொடுக்கத் தயாராக இருந்தார் என்றால், லஞ்சம் வாங்கத் தயாராக இருந்த அதிகாரி யார்? என்று சிபிஐ-தான் விசாரிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: