வெள்ளி, 5 மே, 2017

விகடனின் வட கொரியா அபத்தங்கள் ... அதிகம் வாசிக்காத, நுனிபுல் மேயும் சில எழுத்தாளர்களால்

Image may contain: 1 person, standing and outdoorபொதுவாக பத்திரிகைகளுக்கு சமூக பொறுப்பும் நாட்டுபற்றும் வேண்டும், தமிழக பத்திரிகைகளுக்கு சுத்தமாக இரண்டும் இல்லை, சரி உலக செய்திகளிலாவது உண்மை சொல்லலாம் அல்லவா? அதுவும் இல்லை
வடகொரிய அதிபரை பற்றி விமர்சனங்களை அள்ளிவிடுகின்றார்கள், அதுவும் பெரும் பொய்களை, உண்மை தன்மையினை வரலாற்றை மறைத்து அள்ளிவிடுகின்றார்கள்
அதில் ஆனந்த விகடனும் சிக்கியிருக்கின்றது, என்னமோ தெரியவில்லை பாரம்பரியமிக்க அந்த பத்திரிகை சில அனுபவமில்லா நிரூபர்களை எழுதசொல்லி அபத்தத்தில் சிக்குகின்றது
ஒரு மனிதனை அடிக்கும் முன்னால் அவனின் பிம்பத்தை அடித்து நொறுக்குவது அமெரிக்க ஸ்டைல், அப்படி இப்பொழுது வடகொரிய தலைவரின் இமேஜை கெடுக்கும் விதமாக , குடி ஆபாசம் நீலபடம் பார்ப்பவர், கொடூரர் என உலக மீடியா மூலம் கசிய விட்டிகொண்டிருக்கின்றார்கள், உலக மீடியா எல்லாம் அவர்கள் கட்டுபாடு, அதுதான் உண்மை
அதனை அப்படியே நம்பிகொண்டு ஆனந்தவிகடனில் எழுதபடும் கட்டுரைகள் சரியான அளவு அல்ல‌

உண்மையில் வடகொரியாவில் நடப்பது என்ன?
1950 முதலே அது அமெரிக்க கண்ணை உறுத்தும் நாடு, அப்போரில் அமெரிக்கா கடும் முயற்சி செய்தும் அதனால் முழுவெற்றி பெறமுடியவில்லை
அதன் பின்னும் சோவியத் யூனியன் இருந்த வரை வடகொரியாவினை அமெரிக்காவால் சீண்ட முடியவில்லை, சோவியத் சிதறவும் தன் கரங்களை வலுப்படுத்தியது
இன்றும் பிரம்மாண்ட அமெரிக்க ராணுவதளம் தென்கொரியாவில் உண்டு, ஜப்பானில் உண்டு, ஏன்? எதற்காக என்றால் அதுதான் அரசியல்
முன்னோட்டம் சொல்லவேண்டுமென்றால் முன்பு சவுதியில் அமெரிக்க படைகள் இல்லாமல் இருந்தன, கர்ணல் நாசர் காலத்தில் அமெரிக்க படைகள் அரேபியாவிலே இல்லை
பின் சதாமை காட்டி சவுதிக்கு வந்தன, பின்லேடன் வெளியேற சொன்னபொழுது அவசரமாக சதாமை கொன்றுவிட்டு பின்லேடன் அடுத்த எதிரி என்றனர்
இப்பொழுது பின்லேடனும் இல்லை, ஆனால் ஐஎஸ் என பயம்காட்டி அதே சவுதிக்குள் நீடிக்கின்றன, இப்பொழுது ஈரானை காட்டி பயமுறுத்துகின்றது,
ஆக சவுதிக்கு அமெரிக்கா ஜென்ம சனியாகிவிட்டது
இப்படித்தான் கொரிய மக்களும், ஜெர்மனி போல ஒரே கொரியாவாக இணைய நெருங்கினர், இருவருக்கும் உறவு பலபட்டது, விட்டிருந்தால் வாழ்ந்திருப்பார்கள்
ஆனால் உலகமகா வல்லரசான அமெரிக்கா விரும்புமா? அவர்களின் ராணுவ தளம் என்னாவது, அமெரிக்க ராணுவ தளத்தை தென்கொரியர்களும் விரும்பவில்லை, ஜப்பானியரும் விரும்பவில்லை, அடிக்கடி ஆர்பாட்டம் நடந்தது
உலகசந்தையில் தென்கொரிய நிறுவணங்களை அமெரிக்கா தூக்கிவிட்டாலும் உள்ளூர தென்கொரியர்கள் அமெரிக்க ராணுவ தளங்களை அப்புறபடுத்துவதில் ஆர்வமாயினர்
இனி போர் பதற்றம் ஒன்றுதான் வழி, அவர்களை பாதுகாக்க நாம் இருப்பதாக நம்பவைக்கவேண்டும் என இப்பொழுது வடகொரியாவினை அடிக்க கிளம்புகின்றார்கள்
உண்மையில் வடகொரியா 1990களிலே அணுகுண்டு செய்தாயிற்று, ஏவுகனையும் செய்தாயிற்று, அப்பொழுதெல்லாம் வராத ஆத்திரம் இப்பொழுது அமெரிக்காவிற்கு வருவதென்ன?
முன்பே அதாவது 1990லே முடிவெடுத்தார்கள் , அமெரிக்கா பாகுபலி ராணாவாக ஒற்றை அரசனாக முடிசூட்டும்பொழுதே தன் ஆளுமை ஏற்காத அரசுகள் யாரென குறிப்பெடுத்தார்கள்
ராஜிவ், சதாம் உசேன், லிபியா அதிபர் கடாபி, சிரியா அதிபர் அல்பசாத், வடகொரிய அதிபர் கிம்மின் தந்தை என வரிசையிட்டார்கள்
எல்லோரும் அனுப்பபட்டு வரிசையில் மிஞ்சி இருப்பது ஈரானும், வடகொரியாவும், சிரிய அதிபர் கழுத்துக்கு வந்த கத்தியினை புட்டீன் தடுத்துவிட்டார்
ஆக வடகொரியாவினை இப்பொழுது தீர்க்க கிளம்பிவிட்டார்கள், அது அமெரிக்க எதிரி நாடுகளுக்கு ஆயுதம் விற்பது ஒன்றும் ரகசியமல்ல‌
ஏன் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு விற்கவில்லையா? இறுதிபோரில் சிங்களனுக்கு கொடுக்கவில்லையா? முன்பு தாலிபான்களுக்கு கொடுக்கவில்லையா? ஏன் சதாமையும் பின்லேடனையும் வளர்த்ததே அவர்கள் அல்லவா?
உண்மையில் சீனா, ரஷ்யா எல்லை அருகில் அமெரிக்காவிற்கு பெரும் ராணுவதளம் நிலையாக வேண்டும், ஜப்பான் மீது அணுகுண்டு வீசிவிட்டு தலையிட்டு அமர்ந்தது, கொரியாவில் புகுந்தது எல்லாம் அப்படித்தான்
இனி நிரந்தரமாக அமர ஒரு வாய்ப்பு வேண்டும், இப்போதைய வாய்ப்பு வடகொரியா, நாளை வடகொரியா இல்லை என்றால் தைவானை தூண்டிவிடுவார்கள்
எப்படி அமெரிக்கர்கள் அரேபியாவில் புகுந்து ஆட்டம் போட்டு அமைதி குலைத்திருக்கின்றார்களோ, அப்படி கிழக்கே புகுந்து குட்டையினை குழப்பும் இடம்தான் வடகொரியா
அப்படி வடகொரிய அணுகுண்டு ஆபத்தானது என்றால், ஏன் பாகிஸ்தானிடம் இருப்பதை அனுமதிக்கவேண்டும்? வட கொரியாவிலாவது தீவிரவாதி கிடையாது, பாகிஸ்தானில் திரும்பிய இடமெல்லாம் தீவிரவாதிகள்
அவர்களை கையில் அண்குண்டு கிடைத்தால் என்னாகும்?
ஆக அடித்து நொறுக்கவேண்டிய நாடு பாகிஸ்தானா? வடகொரியவா? என்றால் நிச்சயம் பாகிஸ்தான். ஆனால் அடிப்பார்களா என்றால் இல்லை மாறாக இந்தியாவின் ராணுவ சமநிலைக்கு சற்றும் குறையாமல் பாகிஸ்தானை வைத்திருப்பார்கள், உதாரணம் எப் 17 எனும் நவீன விமானங்களை கொடுத்திருப்பது
இப்படி உண்மையினை எழுதி , உலக யதார்த்ங்களை சொல்லவேண்டிய விகடன் போன்றவைகள், இந்த நாட்டிற்கு எது தேவை என சொல்ல வேண்டிய பொறுப்பான விகடன் அதனை செய்யாமல் வடகொரிய அதிபர் நீலபடம் பார்த்தார் என எழுதுகின்றன‌
கென்னடியும், கிளிண்டனும் ஆடாத ஆட்டத்தையா வடகொரிய அதிபர் ஆடிவிட்டார், அவ்வளவு ஏன்? டிரம்பின் மூன்றாம் மனைவியின் முன்னாள் தொழிலே சந்தி சிரித்தது
உள்ளூர் அரசியலில்தான் உண்மையினை எழுதுவதில்லை, புலிகள் விவகாரத்திலும் உண்மை இல்லை, உச்சமாக வடகொரிய விவகாரத்திலும், அதுவும் பாகிஸ்தானை ஒருவிதமாக கையாண்டு இந்தியாவினை கெடுக்கும் அமெரிக்காவினை எழுத துணியாமல், எங்கோ இருக்கும் வடகொரியாவின் நியாயத்தை மறைந்த்து
அங்கு 1953ல் அமெரிக்கா நடத்திய இனபடுகொலைகளை மறைத்து, ஜப்பானுக்கு அடுத்து அங்கு அணுகுண்டு வீசுமளவு சென்ற அமெரிக்காவின் கொடூரத்தை மறைத்து எழுதுவது நல்லதல்ல‌
அந்த அணுகுண்டு மிரட்டலுக்குத்தான் இன்று வடகொரியா பதிலுக்கு வெடித்து சோதனை செய்கின்றது என்றுமா சொல்லமுடியாது?
இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பதற்றம் 60 ஆண்டுகால தொடர்ச்சி, மூன்று தலைமுறையாக வடகொரியா மல்லுகட்டும் காரியம், பாகுபலி போல நீண்ட கதை
அதனை ஏதோ இன்று அதிகாலை நடந்த சம்பவம் என்பது போல எழுதுவது ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌
விகடன் வர வர தன் அனுபவமற்ற , அதிகம் வாசிக்காத, நுனிபுல் மேயும் சில எழுத்தாளர்களால் தன் தரத்தினை இழந்து வருவது பெரும் வருத்தமளிக்கின்றது  ஸ்டான்லி ராஜன் .. முகநூல் பிராண்டல்

கருத்துகள் இல்லை: