செவ்வாய், 2 மே, 2017

அதிமுகவில் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் புதிய அணி ? இரகச்கியமாக சுமார் ஆறு அணிகள் ?


 ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்
 எடப்பாடிக்கு கலக்கம் அதிமுகவில் புதிதாக தோப்பு வெங்கடாசலம் அணி உருவாகியுள்ளது.முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் தலைமையில்,கொங்கு மாவட்டங்களின் 13 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு கடும் நெருக்கட By: Devarajan Published: Tuesday, May 2, 2017, 11:46 [IST] சென்னை: அதிமுகவில் மீண்டும் ஒரு அணி உருவாகியுள்ளது.முதல்வர் எடப்பாடி அணிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் 13 எம்எல்ஏக்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். மிக விரைவில் அவர் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று சொல்கிறார்கள் கொங்கு மாவட்ட அதிமுகவினர். ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த குழுக்கள் அமைக்கப்பட்டதோடு சரி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. ஆனால், இதோ நாங்க ரெடி என்று பேட்டி மட்டும் தினமும் தருகிறார்கள் என்று பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள் ஈரோடு,நாமக்கல்,கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்.
இந்த நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.
அவருக்கு ஆதரவாக 13 எம்எல்ஏக்கள் உள்ளனர். தோப்பு வெங்கடாச்சலம் கடந்த முறை 5 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் நிலையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதாவின் குட் புக்கில் இருந்தவர்.
செங்கோட்டையனுக்கு போட்டியாக ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர் தோப்பு.
 இது இப்போது அணியாக பிரியும் அளவுக்கு சென்றுள்ளது. ஒரு வேளை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 13 பேர் ஆதரவு தெரிவிக்காவிட்டால் எடப்பாடி மெஜாரிட்டியை நிச்சயம் இழந்து விடுவார்.
 இதனால், ஓ.பி.எஸ். அணியின் ஆதரவை எடப்பாடி அணி கேட்கும் நிலை ஏற்படும். இது எடப்பாடி அணிக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட தலித் எம்.எல்.ஏக்ககள் தனி அணியா செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், அவர்கள் தனியாக ஆலோசனை நடத்தியிருந்தனர்  tamiloneindia

கருத்துகள் இல்லை: