புதன், 3 மே, 2017

சசிகலா சார்பில் சீராய்வு மனு! விடுதலையாவார்?

புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாஉள்ளிட்டோர் மறு சீராய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெ, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ,, தவிர சசிகலா உள்பட மூவருக்கும் சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கப்படுமா இந்நிலையில் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட் பதிவாளர் விசாரணைக்கு வரலாம் எனவும் அப்போது மனுவை ஏற்பதா , நிராகரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 விசாரணை எப்படி வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறுகையில், இது போன்ற சீராய்வு மனு மூத்த வழக்கறிஞர்கள் முன்னிலையில் நீதிபதிகள் தங்களது அறையில் வைத்து விசாரணை நடத்துவர் என்றனர். தலைவர்கள் கருத்து மறு சீராய்வு மனு குறித்து அ.தி.மு.க. அம்மா அணியின் நாஞ்சில் சம்பத் கூறியது, சட்டத்தின் மேல் நம்பிக்கை உள்ளதால் சசிகலா மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். சசிகலாவை விடுதலை செய்ய வேண்டிய சூழல் வரும். கட்சி பிரச்னைக்கும், மறு சீராய்வு மனுவுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.  tamiloneinda

கருத்துகள் இல்லை: