வெள்ளி, 5 மே, 2017

பாஜகவின் குடியரசு தலைவர் வேபாளர் திரௌபதி முர்மு? ஓடிஸா பழங்குடி ,முன்னாள் அமைச்சர் ..

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், பாஜக சார்பில் திரௌபதி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
By: Amudhavalli பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,ரஜினி  ஆகியோர் பெயர்கள் வேட்பாளர் பெயருக்கு அடிப்பட்டன.  இதனைத் தொடர்ந்து, இந்திய ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முவை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக பாஜகவால் முடிவு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக தற்போது உள்ளார். 20 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஓடிஷா மாநிலத்தில் எம்எல்ஏவாக இருந்த திரௌபதி முர்மு சிறந்த எம்.எல்.ஏ.விற்கான விருதினைப் பெற்றுள்ளார். அதே போன்று நிலகந்தா விருது 2007ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

1997 ல் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அவர், ஒடிஷா மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பிரணாப்புக்கு அடுத்து.. பிரணாப்புக்கு அடுத்து.. தற்போதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்த உடன் அந்த இடத்தை அலங்கரிப்பதற்கு பாஜக சார்பில் திரௌபதிதான் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். அப்படி அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றால் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதி திரௌபதிதான் என்ற பெருமை அவரைச் சேரும்.tamiloneindia

கருத்துகள் இல்லை: