செவ்வாய், 2 மே, 2017

கலைஞர் தொண்டர்களை சந்திக்கிறார் ? ஜூன் 3 கலைஞரின் 94 வது பிறந்தநாள்!

சென்னை:''தி.மு.க., தலைவர்கருணாநிதி, ஜூன், 3ல், தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது,'' என, அக்கட்சியின், அமைப்பு செயலர், டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.கருணாநிதியின், 94வது பிறந்த நாள், ஜூன், 3ம் தேதி வருகிறது. இந்த நாளை சிறப்பாக கொண்டாட, தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். அன்று, கோபாலபுரம் வீட்டில், நிர்வாகிகள் மற்றும் கட்சியினரை, கருணாநிதி நேரில் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடம் உள்ளது. இது குறித்து, அமைப்பு செயலர், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கூறுகையில், ''கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவரது, 94வது பிறந்த நாள் அன்று, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.தினமலர்

கருத்துகள் இல்லை: