திங்கள், 1 மே, 2017

நீதிபதி கர்ணன் :எனக்கு மனநோய் இருப்பதாக தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யார்?

Image may contain: 1 personகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனின் மனநிலையை பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.
நீதிபதி கர்ணனின் நடவடிக்கைகளை யாருமே நியாயப்படுத்த முடியாது. சகித்துக் கொள்ள முடியாத காரியங்களை அவர் செய்துள்ளார். ஆனால், அவர் மனநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அயோக்கியத்தனமானது.
கர்ணன் மனநிலை பரிசோதிக்கப்பட வேண்டுமென்றால், ஜெயலலிதாவை இறந்த பிறகு குற்றவாளியாக அறிவிக்க முடியாது என்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஷின் உத்தரவால் அவரும் மனநிலை பரிசோதிக்கப் பட வேண்டியவரே. அவரைப் போல பல உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனநிலை பரிசோதிக்கப்பட வேண்டியவர்களே.


 உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநல சோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இதில் கடும் கோபமும் ஏமாற்றமுமடைந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிபதிகள் அமர்வின் முடிவை வழக்கத்துக்கு விரோதமானது, கேலிக்கூத்தானது என்று சாடினார்.

இம்மாதம் 4-ம் தேதி கர்ணனுக்கு மருத்துவ சோதனை செய்து மே 8-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், “நானா மனநிலை சரியில்லாதவன்? எனக்கு மனநோய் இருப்பதாக தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யார்?

என்னுடைய வழக்கை விசாரித்து வரும் 7 நீதிபதிகளும் ஊழல்வாதிகள். எனவே என்னுடைய சம்மதம் இல்லாமல் டிஜிபி செயல்பட்டால் நான் அவருக்கு எதிராக உத்தரவு வழங்குவேன். அவர் தன் வரம்புக்குட்பட்டு செயல்பட வேண்டும். எந்த சிகிச்சை உத்தரவுக்கும் அடிபணிய மாட்டேன்.

பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் மற்ற ஊழல் நீதிபதிகளை இந்த 7 நீதிபதிகளும் காக்கின்றனர். இந்த தவறான உத்தரவு செயல்படுத்தப் பட கூடாதது. டிஜிபி என்னிடம் வரக்கூடாது" என்றார்.  tamilthehindu  முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை: