வியாழன், 4 மே, 2017

கனடா ராணுவ அமைச்சர் (சீக்கியர்) இந்தியாவில் கூறிய பொய்க்கு மன்னிப்பு கோருகிறார்

Harjit Sajjan (@HarjitSajjan) · Twitter I made a mistake in describing my role. I wish to retract that description and apologize for it. I am truly sorry.
ராணுவ அமைச்சருக்கு எதிர்ப்பு!இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான ஹர்ஜித் சஜ்ஜன் கனடாவில் ராணுவ அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஏற்கனவே கனடா ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படை முகாமிலும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.
இவர், இந்தியா வந்திருந்தபோது ராணுவத்தில் தான் பணிபுரிந்தபோது செய்த சாதனைகளையும், வீரதீரச் செயல்களையும் விளக்கிப் பேசினார். 2006ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் அதில் தலிபான்கள் தாக்கியதில் 12 கனடா ராணுவ வீரர்களும், 14 இங்கிலாந்து வீரர்களும் உயிரிழந்தனர். எனவே, இவர் உண்மைக்குப் பதில் பொய்களைச் சொல்லி கனடா மக்களை வழிதவறி நடத்த முயற்சிக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் ரோனா அம்புரோஸ் குற்றம்சாட்டினார்.

மேலும் பொய்யான தகவல்கள் கூறிய அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே கருத்தை பல்வேறு எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் பிரதமர் ஜஸ்டின் டியூட்ரூ முன்னிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: