திங்கள், 1 மே, 2017

கொடநாடு கொள்ளை கொலை ... பின்னணியில் நிச்சயம் மாநில மத்திய அரசியல் மாபியாக்கள் !



கொடநாடு பங்களா கொலையில் முக்கிய திருப்பமாக பங்களாவில் மரவேலை செய்த சஜீவன், சயன்தான் டிரைவர் கனகராஜ் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. By: Mayura Akilan
சென்னை ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் விசாரணைக்குப் பிறகு கோவை நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். டிரைவர் கனகராஜின் கூட்டாளி சயன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உள்ளார். இந்த கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக சயனும் மற்றொரு கூட்டாளி சஜீவன் என்பவரும் கொடநாடு பங்களாவில் தச்சுவேலை செய்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24ஆம் தேதி காவலுக்கு இருந்த ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு மற்றொரு காவலாளியை தாக்கிவிட்டு அங்கிருந்த பொருட் களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவத்தில் போயஸ் தோட்டத்தில் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ் என்பவர்தான் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதும், அவரது நண்பரான சயன் என்பவரின் ஏற்பாட்டின் பேரில் கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் உள்பட 11 பேர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. ..

டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் மரணமடைந்து விட்டார். சயன், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பிச் சென்ற போது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கினார்.
இதில் வினுப்பிரியா, நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த சயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சூரில் திபு, உதயன், சதீஷன், சந்தோஷ் ஆகிய 4 பேரும், மலப்புரத்தில் ஜித்தன் ராய், அர்ஷத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளனர். இதில் நான்கு பேர் விசாரணைக்குப் பிறகு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜித்தன் ராய், அர்ஷத் ஆகிய இருவரை கோவை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
சஜீவன், குட்டி, மனோஜ்‌ உள்பட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்‌.
போலீஸ் விசாரணை குன்னூர் காவல் நிலையில் கடந்த இரு தினங்களாக 4 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் இருந்ததை அறிந்து, கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கொடநாடு பங்களாவிற்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும் கூறியுள்ளனர். கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தில் பங்கு தருவதாக மனோஜ் ஆசை காட்டியதால் அவருடன் வந்ததாக 4 பேரும் வாக்குமூலம் அளித்தனர். கொள்ளையடிக்க முயற்சித்த போதுதான் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நட்பானது எப்படி? கனகராஜ் போயஸ்தோட்டத்தில் கார் டிரைவராக இருந்தவர். அவருக்கு கொடநாடு பங்களாவின் அனைத்து பகுதிகளும் அத்துபடி.
இவருடன் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதில் சயன் என்பவர் கொடநாடு பங்களாவில் தச்சுவேலை செய்ய வந்த போது கனகராஜ் உடன் நட்பானவர்.
உள் அலங்கார வேலை தலைமறைவாக சஜீவன் கொடநாடு பங்களாவில் மரவேலை, உள் அலங்கார வேலைகளை செய்தவர். அவருக்கு உதவியாளராக வந்தவர்தான் சயன். எனவே சயன், சஜீவன் ஆகியோருக்கு பங்களாவில் எந்த அறையில் எப்படிப்பட்ட பீரோக்கள் இருக்கும், அதற்கான சாவிகள் எப்படியிருக்கும் என்பது முதற்கொண்டு தெரிந்து இருக்கிறது.
இதனால்தான் அவர்களால் பொருட்களை எளிதாக கொள்ளையடிக்க முடிந்துள்ளது. நன்கு அறிந்த நபர்கள் மொத்தத்தில் கொடநாடு பங்களாவைப் பற்றி நன்கு அறிந்த டிரைவர் கனகராஜ், பங்களாவிற்குள் உள் அலங்கார வேலை செய்த சஜீவன், சயன் ஆகியோரின் திட்டப்படியே கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளியை கொன்று விட்டு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஜெயலலிதாவின் கடிகாரங்களும், கிரிட்டல் பொருட்களும் மட்டுமே திருடுபோனதாக கூறினாலும் விலை மதிப்பற்ற ஆவணங்கள், நகைகள், பணம் கொள்ளைபோனது நிஜம்தான் என்று காவல்துறையினர் கிசுகிசுக்கின்றனர்.
சயனுக்கு தெரியும் டிரைவர் கனகராஜ் மரணமடைந்து விட்டார்.
சஜீவன் தலைமறைவாக உள்ளார். விபத்தில் சிக்கிய சயன், கோவை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
சயனை கைது செய்து விசாரித்தால் மட்டுமே கொள்ளை, கொலை பற்றிய உண்மை நிலவரங்கள் தெரியவரும் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
//tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: