ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

டாக்டர் .கிருஷ்ணசாமி :தேவேந்திர குல வேளாளர்களை SC பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்


தேவேந்திர குல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது வரவேற்கத்தகுந்த கோரிக்கை. தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், முதலியார்கள் போன்ற எந்த சாதிக்கும் குறையாமல் சாதிப் பெருமை பேசக் கூடியவர்கள்தான் இந்த தேவேந்திர குல வேளாளர்கள். பறையர்களை அவர்கள் மனிதர்களாகவே பார்ப்பதில்லை. பறையர்கள் வீட்டில் சம்பந்தம் செய்வதில்லை.
பள்ளர் வாழும் கிராமப்பகுதிகளில் கூட பறையர்கள், தனியாகத்தான் குடி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சாதிப் பெருமைதான், கிருஷ்ணசாமியை திருமாவளவனோடு இணைந்து பணியாற்ற விடாமல் தடுக்கிறது.
இட ஒதுக்கீடு தேவேந்திர குல வேளாளர்களின் வாழ்வில் எந்தவித பெரிய மாற்றத்தையும் உண்டாக்கவில்லை என்கிறார் கிருஷ்ணசாமி. 50 ஆண்டு கால இட ஒதுக்கீட்டால், தமிழக அரசு மற்றும் மத்திய அரசில் ஆயிரக்கணக்கான தேவேந்திர குல வேளாளர்கள் அரசுப் பணியில் இருக்கிறார்கள். பலர் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் இருக்கிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பலர் இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், தலித்துகளுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை, பறையர்கள் மற்றும் அருந்ததியர்களை ஒதுக்கி விட்டு, பெருமளவில் அனுபவித்தவர்கள், மற்ற இரு சாதிகளை விட பொருளாதார ரீதியாக முன்னேறிய பள்ளர்களே. 50 ஆண்டு காலம் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து விட்டு, இன்று இட ஒதுக்கீடு வேண்டாம் எங்களை தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்காதீர்கள் என்கிறார். இவர் தனது எம்பிபிஎஸ் சீட்டை இட ஒதுக்கீடு இல்லாமல் பொதுப் பிரிவில் பெற்றாரா என்பதை முதலில்ளி தெளிவுபடுத்த வேண்டும்.
தேவேந்திர குல வேளாளர்கள் எனப்படும் பள்ளர் சமூகத்தினரை, பிரித்தெடுத்து காவிக் கூட்டத்தில் ஐக்கியமாக்குவதற்கான வேலையையே கிருஷ்ணசாமி செய்து வருகிறார். இவரை பள்ளர் சமூக மக்கள் நிச்சயம் நிராகரிக்கப் போகிறார்கள், காவிக் கூட்டத்துக்கு அவர்கள் அடிமையாக மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.  A.Shankar  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: